Keerthy Suresh, Rajinikanth
பெங்களூருவில் பஸ் கண்டெக்டராக பணியாற்றி பின்னர் இயக்குனர் கே.பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் ரஜினிகாந்த். 1975-ம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள் படம் மூலம் ரஜினிகாந்த் நடிகராக அறிமுகமானார். அப்படத்துக்கு பின் சினிமாவில் தனக்கென ஒரு தனி ஸ்டைலை உருவாக்கினார் ரஜினி.
Bharathiraja, Rajinikanth
ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த ரஜினிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் 16 வயதினிலே. இப்படத்தில் கமல், ஸ்ரீதேவி ஆகியோருடன் சேர்ந்து நடித்திருந்தார் ரஜினி. 1978-ம் ஆண்டு பாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த பைரவி படம் மூலம் சூப்பர்ஸ்டாராக உருவெடுத்தார் ரஜினிகாந்த்.
Rajinikanth follow chin mudra
அவரது ஸ்டைலுக்கென தனி ரசிகர் கூட்டமே உருவானது. இதனால் படிப்படியாக மாஸ் ஹீரோவாக உருவெடுத்த ரஜினி, தன் படங்களில் பஞ்ச் வசனங்கள் பேசி அதிலும் ஒரு டிரெண்ட் செட்டராக மாறினார். இப்படி தன்னுடைய விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிகண்ட ரஜினிகாந்த், இன்றுவரை நம்பர் 1 நடிகராக வலம் வருகிறார்.
இதையும் படியுங்கள்... இளையராஜா இசையில் ரஜினிகாந்த் பாடிய ஒரே ஒரு சூப்பர் ஹிட் பாடல்! எது தெரியுமா?
Rajinikanth, Prabhu
ரஜினிகாந்த் ஆன்மிகத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி அவர் தன் உடலை திடமாக வைத்திருப்பதற்கு அவர் தியானம் செய்வதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் ரஜினிகாந்த், அடிக்கடி தன்னுடைய பெரு விரலையும், ஆள்காட்டி விரலையில் சேர்த்து முத்ரா ஒன்றை பின்பற்றி வருவதை பலரும் கவனித்திருக்கலாம்.
Rajinikanth, shah rukh khan
ரஜினிகாந்த் இதை அடிக்கடி பாலோ செய்து வருவதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய தகவல் இருக்கிறது. அது என்னவென்றால், அவர் பின்பற்றும் இந்த கை முத்திரையின் பெயர் சின் முத்ரா. அடிக்கடி அந்த இரண்டு விரல்களையும் சேர்த்து வைக்கும் போது மூளை நரம்புகள் நன்றாக வேலை செய்யுமாம்.