கணவரோடு சேர்ந்து கட்டிய கனவு இல்லத்திற்கு கிரஹப்பிரவேசம் நடத்திய ஹன்சிகா!!

First Published | Oct 17, 2024, 7:47 AM IST

Hansika Motwani New Home : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா, தன் கணவர் சோஹைல் கத்தூரியா உடன் சேர்ந்து குட் நியூஸ் ஒன்றை சொல்லி இருக்கிறார்.

Hansika Husband

தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹன்சிகா. ஸ்கூல் படிக்கும்போதே சினிமாவுக்குள் நுழைந்த ஹன்சிகாவுக்கு குறுகிய காலத்திலேயே புகழ் வெளிச்சம் கிடைத்தது. இதனால் அடுத்தடுத்து விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம் 2, கார்த்தி ஜோடியாக பிரியாணி, விஷால் உடன் ஆம்பள என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

Hansika

பின்னர் உடல் எடை அதிகமானதால் நடிகை ஹன்சிகாவுக்கு படிப்படியாக சினிமா வாய்ப்புகளும் குறைந்தன. இதனிடையே நடிகர் சிம்புவுடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார் ஹன்சிகா. இருவரும் வாலு படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டனர். ஆனால் சில ஆண்டுகளிலேயே சிம்பு - ஹன்சிகாவின் காதல் பிரேக் அப்பில் முடிந்தது.

Tap to resize

Hansika Motwani

இதையடுத்து உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்தார் ஹன்சிகா. ஆனால் அவருக்கு இரண்டாவது இன்னிங்ஸில் பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் உஷாரான ஹன்சிகா, கடந்த 2022-ம் ஆண்டு தன்னுடைய காதலனான சோஹைல் கத்தூரியாவை திருமணம் செய்துகொண்டார்.

இதையும் படியுங்கள்... கணவர் இல்லாமல் தனியே சுவாமி தரிசனம்.. திருப்பதி சென்று வந்த ஹன்சிகா மோத்வானி - Viral Video!

Hansika with her mom

சோஹைலுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். ஹன்சிகாவின் தோழியின் கணவர் தான் இந்த சோஹைல். அவர் முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் ஹன்சிகா உடன் காதல் வயப்பட்டு அவரை குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

Hansika new beginning

திருமணத்துக்கு பின்னரும் நடிகை ஹன்சிகா சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் முன்பு இருந்தது போல் பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நடித்து வருகிறார் ஹன்சிகா. 

Hansika New Home

நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார். அதன்படி அவர் தனது கணவர் சோஹைல் கத்தூரியா உடன் சேர்ந்து அழகிய பங்களா ஒன்றை கட்டி இருக்கிறார். அதன் கிரஹப்பிரவேசத்தில் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Hansika New Home Housewarming

புதிய தொடக்கம் என குறிப்பிட்டு நடிகை ஹன்சிகா போட்டுள்ள பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருவதோடு, வாழ்த்துக்களும் நிரம்பி வழிகின்றன. ஹன்சிகாவின் புது வீட்டு கிரஹப்பிரவேசத்தில் அவரது குடும்பத்தினர் மட்டும் கலந்துகொண்டனர். 

இதையும் படியுங்கள்... Hanksika : “இதே போல எப்பவும் ஹேப்பியா இருக்கணும் கடவுளே..” ஹன்சிகாவின் பர்த்டே கிளிக்ஸ் இதோ..

Latest Videos

click me!