
டிஸ்கோ சாந்தி - ஸ்ரீஹரி தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். துரதிர்ஷ்டவசமாக இவரின் மகள் சிறு வயதிலேயே தவறிய நிலையில், கடந்த 2013-ல் நடிகர் ஸ்ரீஹரியும் உடல்நலக்குறைவால் காலமானார். ஸ்ரீஹரியின் மூத்த மகன் ஹீரோவாக நடிக்க முயன்ற நிலையில் வெற்றி கிடைக்காததால், பிஸ்னஸ் செய்து வருகிறார்.
சமீபத்தில் டிஸ்கோ சாந்தி ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது பல விஷயங்களை அவர் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக இந்த நேர்காணலில் நடிகை சில்க் ஸ்மிதாவுடனான தனது நட்பை டிஸ்கோ சாந்தி வெளிப்படுத்தியுள்ளார். சில்க் ஸ்மிதாவின் ஆடம்பர வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை டிஸ்கோ சாந்தி முதல் முறையாக இதில் பகிர்ந்துள்ளார்.
சில்க் ஸ்மிதா மிகவும் நல்லவர். சகஜமாகப் பேசுவார். நான் அக்கா என்று அழைப்பேன். அவரும் எல்லா விஷயங்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்வார். சில்க் ஸ்மிதா அந்தக் காலத்திலேயே லட்சங்களில் சம்பளம் வாங்குவார். ஒரு நாளைக்கு அவர் ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை சம்பளம் வாங்கினார். ஆனால் நான் அந்த நிலைக்கு வர பத்து வருடங்கள் ஆனது. அவரது வாழ்க்கை ஆடம்பரமாக இருந்தது. மாதம் ரூ.5 லட்சம் வாடகை கொடுத்து வாடகை வீட்டில் வாசித்தார். சொந்த வீடு வாங்கலாமே என்றால், கேட்க மாட்டார்.
சில்க் ஸ்மிதா பணக் கட்டுகளில் படுப்பார். இதை நான் முதலில் பார்த்தபோது மிரண்டு போய் விட்டேன். நான் வாய்ப்புகளுக்காக அலைந்தபோது தன்னை யாரும் ஆதரிக்கவில்லை. அதனால்தான் இப்போது பணக் கட்டுகளில் படுத்திருக்கிறேன் என்பார். படப்பிடிப்பில் சில்க் ஸ்மிதாவை அனைவரும் மதிப்பார்கள் என்று டிஸ்கோ சாந்தி கூறினார்.
காலை வாரிய யுவன்! பாட்டே இல்லாமல் அஜித் டான்ஸ் ஆடிய சூப்பர் ஹிட் பாடல் எது தெரியுமா?
ஆந்திர மண்ணிலும் ஏலூரு அருகே உள்ள, ஒரு கிராமத்தில் பிறந்து பல கஷ்டங்களுக்கு பின்னர் மாமியார் கொடுமைகளைத் தாங்க முடியாமல் வீட்டை விட்டு ஓடி வந்து நடிகையாக மாறியவர் தான் சில்க். வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சில்க் ஸ்மிதா நடித்தார்.
அவரது மயக்கும் கண்களுக்கு இளைஞர்கள் அடிமையாகவே இருந்தனர். ஜோதிலட்சுமி, ஜெயமாலினிக்குப் பிறகு அவர்களையே மிஞ்சும் வகையில் இடத்தை பிடித்தவர் சில்க் ஸ்மிதா. ஐட்டம் டான்ஸ் என்பதை தாண்டி, வில்லி, துணை நடிகை போன்ற வேடங்களையும் சில்க் ஸ்மிதா ஏற்று நடித்தார். காதலில் தோல்வியடைந்த சில்க் ஸ்மிதா தனிமையைத் தாங்க முடியாமல் 1996 இல் தற்கொலை செய்து கொண்டார்.
ஒப்பற்ற புகழை அனுபவித்த சில்க் ஸ்மிதாவின் உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சில்க் ஸ்மிதாவின் இறுதிச் சடங்குகளுக்கு திரையுலகிலிருந்து யாரும் வரவில்லை. குடும்பத்தினரும் கண்டுகொள்ளவில்லை. கொடுத்த வாக்குறுதியின்படி நடிகர் அர்ஜுன் கலந்து கொண்டதாகத் தகவல். சில்க் ஸ்மிதாவின் குடும்பத்தினரை யாரும் அரவணைக்காததால், அவர்களும் அவரை ஒதுக்கி வைத்தனர்.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து 2011 இல் டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் பாலிவுட் படம் வெளியானது. வித்யா பாலன், நசிருதீன் ஷா, இம்ரான் ஹஷ்மி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்தப் படத்தை மிலன் லூத்ரியா இயக்கியுள்ளார். டர்ட்டி பிக்சர் நல்ல வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் வித்யா பாலன் துணிச்சலான வேடத்தில் நடித்தார். டர்ட்டி பிக்சர் வித்யா பாலனுக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது.
டி.எம்.சௌந்தர்ராஜனை போண்டியாக்கிய டி.ராஜேந்தரின் ஒரே ஒரு பாடல்!
இந்தப் படத்தின் தலைப்பில் சில்க் ஸ்மிதாவின் குடும்பத்தினர் ஆட்சேபனை தெரிவித்தனர். சிறிது சர்ச்சை எழுந்தது. சில்க் ஸ்மிதா இறக்காமல் இருந்திருந்தால், இன்னும் பல சாதனைகளைப் படைத்திருப்பார். பணக் கட்டுகளில் படுத்த சில்க் ஸ்மிதா ஒரு அனாதையாக இந்த உலகை விட்டுப் பிரிந்தார்.