காலை வாரிய யுவன்! பாட்டே இல்லாமல் அஜித் டான்ஸ் ஆடிய சூப்பர் ஹிட் பாடல் எது தெரியுமா?

Published : Oct 16, 2024, 05:06 PM IST

பிரபல இயக்குனர் விஷ்ணு வரதன் பாட்டே இல்லாமல் தல அஜித்தை... ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட வைத்த ரகசியத்தை கூறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.  

PREV
14
காலை வாரிய யுவன்! பாட்டே இல்லாமல் அஜித் டான்ஸ் ஆடிய சூப்பர் ஹிட் பாடல் எது தெரியுமா?
Actor Ajith starrer Billa Movie

கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான, 'குறும்பு' என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஷ்ணுவரதன். இதைத்தொடர்ந்து இவர் இயக்கிய அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம் போன்ற படங்கள் கலவையான விமர்சனந்த்தை பெற்றாலும், விஷ்ணு வரதனை தனித்துவமாக காட்டியது. இவர் இயக்கத்தில், 2007-ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் தாறுமாறு ஹிட் அடித்த திரைப்படம் தான் 'பில்லா'.

24
Billa Movie Latest Update

1980-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி, சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற 'பில்லா' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட அஜித்தின் இந்த படத்திற்கும் அதே பெயரே வைக்கப்பட்டது. இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்த நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் நமீதா என  இரண்டு நாயகிகள் போட்டி போட்டு நடித்திருந்தனர். மேலும் பிரபு, ரகுமான், ஆதித்யா மேனன், சந்தானம், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

என்ன ஆச்சு? நடக்க கூட முடியாமல்... பாண்டியன் ஸ்டோர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தூக்கிவரப்பட்ட நிரோஷா!

34
Billa Movie Director Vishnu Varadhan

யுவன் சங்கர் ராஜா இசையமைத்த 'பில்லா'  படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருந்தார்.  இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி, 61வது கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.  அஜித்தை மிகவும் ஸ்டைலிஷ் ஆன ஹீரோவாக இப்படத்தில் விஷ்ணு வர்தன் காட்டியிருப்பார். 'பில்லா' திரைப்படம் வெளியாகி சுமார் 15 வருடங்களுக்கு மேல் ஆனாலும், தொலைக்காட்சிகளில் திரையிட்டால் அதிகம் ரசித்து பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.
 

44
Yuvan Shankar raja and Ajith

அஜித்தின் திரை உலக வாழ்க்கையில் மாஸ்டர் பீஸ் படனமான இந்த படத்தில் தான் பாட்டே இல்லாமல், அஜித்தை டான்ஸ் ஆட வைத்ததாக இயக்குனர் விஷ்ணு வரதன் கூறி உள்ளார்.

அதாவது யுவன் சங்கர் ராஜா, 'மை நேம் இஸ் பில்லா' பாட்டை கொடுத்து விடுவதாக கூறியதால்...அதை நம்பி நம்பி இந்த பாடலுக்கான ஷூட்டிங் செட் அனைத்தும் போட்டு, அஜித் மற்றும் மற்ற டான்சர்கள் அனைவரையும் படப்பிடிப்புக்கு விஷ்ணு வரதன் வரவைத்து நிலையில், ஒரு சில காரணங்களால் யுவன் சங்கர் ராஜா கடைசி வரை பாட்டை அனுப்பமுடியாமல் போனதாம். அந்த சமயத்தில் என்ன செய்வது என தெரியாமல், பாட்டே இல்லாமல், அஜித்தை வைத்து எப்படி எல்லாம் ஸ்டைலா காமிக்க முடியுமோ அப்படி எல்லாம் அவரை ஸ்டைலாக காட்டியும், ஆட வைத்து ஷார்ட்ஸ் எடுத்துள்ளார் விஷ்ணுவரதன். பின்னர் யுவன் பாட்டை கொடுத்த பின்னர் மீதியை ஷூட் செய்து இந்த பாடலை முடித்துள்ளார். இந்த தகவலை அண்மையில் விஷ்ணுவர்தன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையை பிரித்து மேயும் மழை! பிக்பாஸ் வீட்டை வெள்ளம் சூழ்ந்ததா?

Read more Photos on
click me!

Recommended Stories