சென்னையை பிரித்து மேயும் மழை! பிக்பாஸ் வீட்டை வெள்ளம் சூழ்ந்ததா?

Published : Oct 16, 2024, 03:00 PM IST

Bigg Boss Tamil Season 8: சென்னையில் கன மழை கொட்டி தீர்த்து வருவதால், பல இடங்கள் வெள்ளை கார்டாக மாறி உள்ளது. எனவே பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடர்ந்து நடக்குமா? வீட்டை வெள்ளம் சூழ்ந்ததா? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

PREV
16
சென்னையை பிரித்து மேயும் மழை! பிக்பாஸ் வீட்டை வெள்ளம் சூழ்ந்ததா?
Bigg Boss Tamil Season 8

விஜய் டிவியில் கலந்த அக்டோபர் 6-ஆம் தேதி, துவங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ் சீசன் 8. கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகியதால், அவருக்கு பதிலாக தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செட் ஆவாரா? என பல பிக்பாஸ் ரசிகர்கள் விமர்சித்து வந்த நிலையில், தன்னுடைய முதல் நிகழ்ச்சியிலேயே அனைவரையும் மூக்கு மீது விரல் வைக்க வைத்தார். அதே போல் கடந்த வாரம், ஒரு நடுவராக இல்லாமல் மக்கள் பிரதிநிதியாகவே விஜய் சேதுபதி... சில நுணுக்கமான கேள்விகளையும் கேட்டு போட்டியாளர்களை ப்ரை செய்தது வேற லெவல் என கூறலாம்.
 

26
Heavy Rain In Chennai

கடந்த வாரம், பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் போட்டியாளராக உள்ளே வந்து... முதல் போட்டியாளராகவே வெளியேறினார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் தரமான கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளராக இருந்தும், இவரால் சில பிஸிக்கல் டாக்கில் விளையாட முடியாமல் சிரமப்பட்டது தான்... இவர் வெளியேறியதற்கான காரணம் என கூறப்பட்டது. அதே போல் மஹாலட்சுமி தரப்பில் இருந்து தன்னுடைய கணவரை வெளியே அனுப்பிவிடுமாறு... நிகழ்ச்சியாளர்களுக்கு கோரிக்கை வைத்ததும் இவர் வெளியேற காரணம் என கூறப்படுகிறது. கடந்த சீசனில் கூட, ஐஷுவை வெளியேற்றவேண்டும் என அவரது பெற்றோர் கேட்டு கொண்டதால் அவரை பிக்பாஸ் வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.
 

36
Flood Surrounded by Bigg Boss House

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இரண்டாவது வாரத்தை நெருங்கி வரும் நிலையில்.... இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ள போட்டியாளர்களில் யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், தற்போது சென்னையில் கொட்டி தீர்க்கும் மழை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி? தொடர்ந்து நடக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
 

46
Bigg boss Contestants

தமிழகத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பேயும் வடகிழக்கு பருவ மழை, இப்போதே துவங்கி விட்டது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக கொட்டி தீர்த்த மழையால், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு. அதே போல் எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களும் தங்களுடைய அன்றாட பணிகளை கூட செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.
 

56
Bigg Boss Contestant Affected Rain?

பல வீடுகளின் உள்ளே மழைநீர் வீட்டுக்குள் புகுந்ததால், தமிழக அரசு ஏராளமான மக்களை பத்திரமான மீட்டு முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்து வருகிறது.  மேலும் மழை நீர் விரைவாக வடிவதற்கான முன்னேற்பாடுகளை வேகப்படுத்தியுள்ளது. மழைநீர் வடிவதற்கான வடிகால்கள் போடப்பட்டிருந்தாலும்... கடல் நீர் தண்ணீரை உள் வாங்குவதற்கு தாமதம் ஆவதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது. அதே போல் சென்னை செம்பரம்பாக்கம் ஏறி மற்றும் புழல் ஏரிகளில் நீர் நிரம்பி வழிகிறது.
 

66
What Happened in Bigg Boss 8 House

 சென்னை செம்பரம்பாக்கம் பள்ளமான இடம் என்பதால், நீர் விரைவாக தேங்கி விடும். இந்த பகுதியில் தான் தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கான பிரத்தியேக செட் போடப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் பகுதியில் தண்ணீர் தேங்கி நிர்ப்பதால்... பிக்பாஸ் வீட்டின் உள்ளேயும் மழை நீர் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போது மழை காரணமாக ஒரு நாள் இரவு மட்டும் போட்டியாளர்கள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

பிக்பாஸ் வீட்டுக்குள் தண்ணீர் செல்லாத அளவுக்கு நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் துரித நடவடிக்கை எடுத்து வந்தாலும், செம்பரம்பாக்கம் பகுதியில் தேங்கி நிற்கும் நீரை பார்த்து போட்டியாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு... ரசிகர்களும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினரும், நண்பர்களும் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories