ஜிகிரி தோஸ்து விக்னேஷ் சிவனுக்காக மூச்சு விடாமல் பாடிய அனிருத் - அது என்ன பாட்டு தெரியுமா?

First Published | Oct 16, 2024, 2:01 PM IST

விக்னேஷ் சிவன் இயக்கி, லிரிக்ஸ் எழுதிய பாடலை இசையமைப்பாளர் அனிருத் மூச்சு விடாமல் பாடி அசத்தி இருக்கிறார். அது என்ன பாடல் என்பதை பார்க்கலாம்.

vignesh shivan, Anirudh

விக்னேஷ் சிவன் படங்கள் என்றாலே நிச்சயம் அனிருத் தான் இசையமைப்பாளராக இருப்பார். நானும் ரெளடி தான் படத்தில் தொடங்கிய இந்த கூட்டணியின் பயணம் தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல், லவ் இன்சூரன்ஸ் கம்பேனி என நீண்டு வருகிறது. இசையமைப்பாளராக மட்டுமின்றி விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பராகவும் இருந்து வருகிறார் அனிருத். இதனால் விக்னேஷ் சிவன் படங்களுக்கு அவரது பாடல்கள் கொஞ்டம் ஸ்பெஷலானதாகவே இருக்கும்.

LIK Movie

அந்த வகையில், அனிருத் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பேனி. இப்படத்தை நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும், லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள இப்படத்தில் சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்... ஆளு தான் ஒல்லி; ஆனா இசையில் கில்லி! அனிருத் அசுர வளர்ச்சி அடைந்தது எப்படி?

Tap to resize

Anirudh single Breath Song

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர உள்ளனர். இதனிடையே அப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது.

Dheema Dheema Song

தீமா தீமா என தொடங்கும் இந்தப் பாடலுக்கு பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். அனிருத் தான் இப்பாடலை தன்னுடைய சொந்த குரலில் பாடி உள்ளார். இந்தப் பாடலில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இப்பாடலை மூச்சு விடாமல் பாடி அசத்தி இருக்கிறார் அனிருத். மண்ணில் இந்த காதல் பாடலை எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடி அசத்தியதை போல் அனிருத் முதன்முறையாக தீமா தீமா என்கிற பாடலை மூச்சு விடாமல் பாடி அசத்தி உள்ளார். இந்தப்பாடல் தற்போது செம்ம வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... புதிய அவதாரம் எடுக்கும் அனிருத்! வி.எஸ். மணி & கோ பில்டர் காஃபி நிறுவனத்தில் முக்கிய பதவி!

Latest Videos

click me!