லேடீஸ் பாத்ரூமை எட்டிப்பார்த்த ஆண் போட்டியாளர்; எச்சரித்த ஜாக்குலின் - பிக்பாஸில் என்ன நடக்குது?

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஆண் போட்டியாளர் ஒருவர் தங்கள் அறையை எட்டிப்பார்ப்பதாக ஜாக்குலின் குற்றம்சாட்டி இருக்கிறார்.

Bigg Boss Tamil season 8

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது 10 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. பிக்பாஸ் வரலாற்றில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் வெகு சிலரே. அதன்படி முதன்முதலில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டவர் மகத். இவர் பிக்பாஸ் வீட்டில் டேனி உடன் அடிதடி சண்டையில் ஈடுபட்டதால் அவரை பாதியில் வெளியேற்றினர்.

Bigg Boss Tamil season 8 Contestants

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இரண்டும் சம்பவங்கள் நடத்தது. அதில் சரவணன், தன்னுடைய சக போட்டியாளர்களுடன் பேசும்போது தான் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் பயணிப்பேன் என கூறி இருந்தார். அவரின் இந்த பேச்சு சர்ச்சை ஆனதால் அவரை பாதியில் வெளியேற்றினார் பிக்பாஸ். அதேபோல் அந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட மதுமிதா, காவிரி விவகாரம் தொடர்பாக ஷெரின் உடன் ஏற்பட்ட மோதலால் கையை அறுத்துக் கொண்டார். இதையடுத்து அவரை பிக்பாஸ் டீம் நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்றியது.


Jacquline vs Jeffry

இதையெல்லாம் விட மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் வெளியேறிய போட்டியாளர் என்றால் அது பிரதீப் ஆண்டனி தான். அவர் மீது கடந்த சீசனில் கலந்துகொண்ட பெண்கள் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததோடு, அவர் இருந்தால் இந்த வீட்டில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் போர்க்கொடி தூக்கினர். இதனை தீர விசாரிக்காமல் கமல்ஹாசனும் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். பெண்கள் விஷயத்தில் தவறாக நடந்துகொண்டதாக வெளியேற்றப்பட்ட ஒரே போட்டியாளர் பிரதீப் தான்.

இதையும் படியுங்கள்... ஆணாதிக்கம் உள்ள வீடாக மாறுகிறதா பிக்பாஸ்? பெண்களை இப்படியா கொடுமைப்படுத்துவது!

Jacquline

தற்போது அதே பாணியில் ஒரு சம்பவம் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலும் அரங்கேறி வருகிறது. இந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள ஜாக்குலின், நேற்று விதியை மீறி கிச்சனில் இருந்து பாத்திரம் கழுவும் லிக்யூடை திருடிச் சென்று லேடீஸ் பாத்ரூமில் உள்ள வாஷ் பேசின் அருகே வைத்துக் கொண்டார். இதைக்கண்டுபிடித்த ஆண்கள் அணியினர் அவரிடம் இருந்து அதை திரும்ப பெறுவதற்காக அதை எடுத்து வர சொல்லினர். ஆனால் ஜாக்குலின் அதிலும் திருட்டு வேலை பார்த்து பாதி லிக்யூடை வேறு ஒரு கப்பில் ஊற்றி வைத்துவிட்டு மீதி உள்ளதை மட்டும் கொடுத்தார்.

Gana Jeffry

ஜாக்குலின் இதுபோன்ற தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடுவதை ஜெஃப்ரி எட்டிப்பார்த்தார். அதை கவனித்த ஜாக்குலின், நீ ஏன் எங்க ரூம எட்டி பாக்குற, ரொம்ப தப்பா இருக்கு என்று சொல்லி ஜெஃப்ரியை எச்சரித்தார். இதேபோல நேற்று நடந்த நாமினேஷனின் போது ஜெஃப்ரிக்கு கொஞ்சம் இடம் கொடுத்த ரொம்ப தப்பா நடந்துக்குறான் என்று கூறி செளந்தர்யா நாமினேட் செய்தார். இப்படி அடுத்தடுத்து பெண் போட்டியாளர்கள் ஜெஃப்ரி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருவதால் அவரும் பிரதீப் நிலைமை தான் அவருக்கும் வருமா அல்லது விஜய் சேதுபதி இந்த விவகாரத்தில் தலையிடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... கேப்டனான சத்யா, முட்டி மோதிய ஹவுஸ்மேட்ஸ், பரபரப்பான வீடு – 2ஆவது வார நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்?

Latest Videos

click me!