என்ன ஆச்சு? நடக்க கூட முடியாமல்... பாண்டியன் ஸ்டோர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தூக்கிவரப்பட்ட நிரோஷா!

First Published | Oct 16, 2024, 11:26 AM IST

நடிகை நிரோஷா நடக்க கூட முடியாத நிலையில், 'பாண்டியன் ஸ்டோர்' ஷூட்டிங்கில், கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்த வீடியோ மற்றும், புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 

Nirosha Painful Video

நடிகை நிரோஷா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்' என்கிற சீரியலில் நடித்து வரும் நிலையில், இவரை இந்த சீரியலில் நடித்து வரும் ஹீரோக்களில் ஒருவரான வி ஜே கதிர்வேல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தூக்கி வரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Pandian Store Shooting Spot

பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் ஐந்தாவது மனைவியான கீதாவுக்கு பிறந்தவர்தான் நடிகை நிரோஷா. இவர் பிரபல நடிகை ராதிகாவின் சகோதரி ஆவார். தன்னுடைய அக்கா ராதிகாவை தொடர்ந்து தமிழ் சினிமாவில் 'அக்னி நட்சத்திரம்' திரைப்படத்தில் 1988 ஆம் ஆண்டு, ஹீரோயினாக அறிமுகமான நிரோஷா முதல் படத்திலிருந்து, தன்னுடைய இளமை துள்ளலான நடிப்பால் ரசிகர்களை மயக்கினார்.

Tap to resize

Nirosha Movies

இதைத்தொடர்ந்து சூர சம்ஹாரம், செந்தூரப்பூவே, பார்வைகள் பலவிதம், பட்டிக்காட்டு தம்பி, பாண்டிய நாட்டு தங்கம், என பல படங்களில் மாடர்ன் கதாபாத்திரங்களில் நடித்தார்.  நடிகை நிரோஷா தமிழைத் தாண்டி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் இதுவரை நடித்துள்ளார்.

Radhika Sister Nirosha Serial

தன்னுடன் நடித்த பிரபல நடிகர் ராம்கியையே காதலித்து திருமணம் செய்து கொண்ட நிரோஷா... தன்னுடைய கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.  திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகிய நிரோஷா, அவ்வப்போது ஏதேனும் சில படங்களில் தலைகாட்டி வந்தாலும், சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். குறிப்பாக 2000 முதல் 2004 ஆம் ஆண்டு வரை இவர் நடிப்பில் வெளியான 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' காமெடி தொடர் நல்ல மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பின்னர் தாமரை, மின்னலே, சந்திரகுமாரி, வைதேகி காத்திருந்தாள், போன்ற தொடர்களிலும் நடித்தார் நிரோஷா.

Painful video

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்கிற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் நிரோஷா முதுகு வலி காரணமாக எழுந்து கூட  நிற்க முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், இவருக்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் வி.ஜே கதிர்வேல் கந்தசாமி, கையில் தூக்கிக்கொண்டு வந்து ஒரு சாரில் அமர வைக்கிறார். இந்த உருக்கமான வீடியோவை வெளியிட்டு,  "வாழ்க்கை ஒருவனை எவ்வளவு தூரம் அழைத்துச் சென்றாலும், ஒரு மகன் எப்போதும் தன் தாயின் அன்பை இதயத்தில் சுமந்து கொண்டிருப்பான்" என்று பதிவிட்டுள்ளார். இந்த உணர்வு பூர்வமான வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலர்..  'உனகளுக்கு என்ன  என, அன்போடும், அக்கறையோடும்... நிரோஷாவை விசாரித்து வருகினார்கள்."

Latest Videos

click me!