SPB-க்காக ஒரு மாசம் வெயிட் பண்ணி இளையராஜா கம்போஸ் செய்த எவர்கிரீன் ஹிட் சாங் பற்றி தெரியுமா?

Published : Oct 16, 2024, 09:57 AM ISTUpdated : Oct 16, 2024, 11:44 AM IST

இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் ஒன்றை எஸ்பிபி தான் பாட வேண்டும் என இயக்குனர் அடம்பிடித்ததால் ஒரு மாதம் காத்திருந்து ரெக்கார்ட் செய்தார்களாம்.

PREV
14
SPB-க்காக ஒரு மாசம் வெயிட் பண்ணி இளையராஜா கம்போஸ் செய்த எவர்கிரீன் ஹிட் சாங் பற்றி தெரியுமா?
SPB, Ilaiyaraaja

இசைஞானி இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் சேர்ந்தால் அப்பாடல் கன்பார்ம் ஹிட் என கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு இவர்கள் இருவரது காம்போவில் எக்கச்சக்கமான ஹிட் பாடல்கள் வந்துள்ளன. எஸ்.பி.பி, இளையராஜா இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்து வந்தனர். அப்படி தன் நண்பன் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்காக இசைஞானி இளையராஜா சுமார் ஒரு மாதம் காத்திருந்து ஒரு பாடலை கம்போஸ் செய்திருக்கிறார். அது என்ன பாடல் என்பதை பார்க்கலாம்.

24
SPB sing for Ilaiyaraaja

இயக்குனர் ஆர்.வி உதயகுமார் அவரது படத்திற்காக ஒரு பாடல் எழுதிக்கொண்டுபோய் இளையராஜாவிடம் கொடுக்கிறார். பாடல் வரிகளை கொடுத்த கையோடு அவர் இன்னொரு கண்டிஷனையும் வைக்கிறார். இந்தப் பாடலை எஸ்.பி.பி தான் பாட வேண்டும் என்பது தான் அந்த கண்டிஷன். அதற்கு இளையராஜா ஓகே சொல்லி எஸ்.பி.பியை தொடர்பு கொண்டபோது, அவர் வெளிநாட்டில் இருப்பது தெரியவருகிறது. அவர் வர ஒரு மாதம் ஆகும் என்பதால் வேறு பாடகரை வைத்து அப்பாடலை பதிவு செய்யலாம் என இளையராஜா சொல்ல, அதற்கு ஆர்.வி உதயகுமார் மறுத்துவிட்டாராம்.

இதையும் படியுங்கள்... கிளாசிக் தமிழ் ஹீரோ; அவர் படத்தில் யுவன் போட்ட மெட்டை பயன்படுத்திய இசைஞானி - எந்த பாட்டில் தெரியுமா?

34
SP Balasubrahmanyam, Ilaiyaraaja

எனக்கு எவ்வளவு நாள் ஆனாலும் சரி இந்தப் பாடலை எஸ்.பி.பி தான் பாட வேண்டும் என திட்டவட்டமாக சொன்னதால், வேறு வழியின்றி எஸ்.பி.பி வெளிநாட்டில் இருந்து திரும்பும் வரை அவருக்காக ஒரு மாதம் காத்திருந்து கம்போஸ் செய்த பாடல் தான் கிழக்கு வாசல் படத்தில் இடம்பெறும் பச்சமலை பூவு என்கிற பாடல். இந்த எவர்கிரீன் ஹிட் பாடலை தான் சுமார் ஒரு மாதம் காத்திருந்து ரெக்கார்ட் செய்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.

44
Pachamala Poovu song

ஹீரோயினை ஹீரோ தாலாட்டு பாடி தூங்க வைக்கிற மாதிரியான சிச்சுவேசன் உடன் கூடிய இந்த பாடலை எஸ்.பி.பி பாடக் கேட்டால் மெய்மறந்து போய்விடுவார்கள். ஒரு தாலாட்டுக்கான மிகச்சிறந்த குரலாக எஸ்.பி.பியின் வாய்ஸ் அந்த பாடலுக்கு கச்சிதமாக பொறுந்தி இருக்கும். இவ்வளவு உணர்வுப்பூர்வமாக ஒரு பாடலை பாடிக்கொடுக்கிறார் என்றால் அவருக்காக ஒருமாசம் என்ன ஒரு வருஷமே காத்திருக்கலாம் என சொல்லும் அளவுக்கு இப்பாடல் இன்றளவும் பலரது மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... ஒரே நாளில் முடிவான யுவனின் 3-ஆவது திருமணம்! என்னால் வரமுயாது.. இளையராஜா கூறிய காரணம் என்ன தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories