பண்டிகை தினத்தன்று பட்டாசாய் ரிலீஸ் ஆக உள்ள தனுஷின் ‘குபேரா’!!

First Published | Oct 16, 2024, 2:45 PM IST

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா நடித்துள்ள பான் இந்தியா படமான குபேரா, பண்டிகை தினத்தன்று ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Kubera Movie

தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ராயன் திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. இப்படத்தில் ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி இயக்கியும் இருந்தார் தனுஷ். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இட்லி கடை என்கிற திரைப்படத்தை இயக்கி அதில் ஹீரோவாக நடித்து வருகிறார் தனுஷ், இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகிறார்.

Nagarjuna Kubera

இதுதவிர தனுஷ் இயக்கியுள்ள மற்றொரு திரைப்படமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற திரைப்படமும் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் தனுஷ் கைவசம் உள்ள மற்றொரு பான் இந்தியா படம் தான் குபேரா. இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் நடிகர் நாகார்ஜுனாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... புதிய தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து 52-வது படத்திற்கு அஸ்திவாரம் போட்ட தனுஷ்!

Tap to resize

kubera movie Rashmika

குபேரா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தான் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படம் இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்த ஆண்டுக்கு குபேரா படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதுவும் பண்டிகை தினத்தில் தான் குபேரா படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Actor Dhanush

ஆனால் பொங்கல் பண்டிகை இல்லையாம். ஏற்கனவே பொங்கல் ரேஸில் ஏராளமான படங்கள் காத்திருப்பதால் குபேரா திரைப்படத்தை 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். அதுவும் அம்மாதம் 27-ந் தேதி மகா சிவராத்திரி பண்டிகை விடுமுறையை ஒட்டி குபேரா படத்தை திரைக்கு கொண்டுவர பிளான் போட்டு வருகிறார்களாம். தனுஷ் மிகத்தீவிரமான சிவ பக்தர் என்பதால் மகா சிவாராத்திரியன்று குபேரா படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

இதையும் படியுங்கள்... 25 முறை ரிஜெக்ஷன்ஸ்; வலிகள் நிறைந்த ராஷ்மிகாவின் திரையுலக பின்னணி!

Latest Videos

click me!