பின் வாங்கிய லப்பர் பந்து! அக்டோபர் 18 ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

First Published | Oct 17, 2024, 12:11 PM IST

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருந்த 'லப்பர் பந்து' திரைப்படம் கடைசி நேரத்தில் ஓடிடி ரிலீஸில் இருந்து விலகிய நிலையில், நாளை வெளியாக உள்ள படங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
 

This Week ott Release

அக்டோபர் 18ஆம் தேதி, அதாவது நாளை திரையரங்குகளில் சார், கருப்பு பெட்டி, ராக்கெட் ட்ரைவர், ஆலன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. இதை தொடர்ந்து இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்கள் குறித்து பார்க்கலாம்.

ரசிகர்கள் எப்படி திரையரங்குகளில் வெளியாகும் படங்களை பார்க்க ஆர்வம் காட்டுகிறார்களே, அதே போல் ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படங்களுக்கும் எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. திரையரங்கில் படங்களை பார்க்க தவறவிட்ட ரசிகர்கள், போட்டி போட்டு கொண்டு, ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படத்தை பார்க்கிறார்கள். 

Lubber Pandhu

ஒருசிலர் விடுமுறை நாட்களில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு அமர்ந்து வீட்டிலேயே, ஸ்னாக்ஸ் சாப்பிட்டு கொண்டே ஹோம் தியேட்டரில் இது போன்ற புது படங்களை பார்த்து ரசிக்கிறார்கள்.சரி இந்த வாரம் ஓடிடி யில் வெளியாக உள்ள திரைப்படங்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

அக்டோபர் 18ஆம் தேதி, ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட 'லப்பர் பந்து' திரைப்படம் திடீரென ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது நேற்று படக்குழு அறிவித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு திரையரங்குகளில் மிகப்பெரிய லாபத்தை ஈட்டிய படமாக அமைந்தது. இப்படத்தை தமிழரசன் பச்சமுத்து என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியிருந்தார். இப்படத்தில் கெத்து என்கிற கேரக்டரில் அட்டகத்தி தினேஷும், அன்பு என்கிற கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாணம் நடித்திருந்தனர். தினேஷுக்கு ஜோடியாக நடிகை சுவாசிக்கா நடிக்க, சஞ்சனா என்கிற அறிமுக நடிகை ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். காளி வெங்கட் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தின் ரிலீஸ் தேதி தல்லிகைக்கப்பட்ட நிலையில்.. புதிய ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

காலை வாரிய யுவன்! பாட்டே இல்லாமல் அஜித் டான்ஸ் ஆடிய சூப்பர் ஹிட் பாடல் எது தெரியுமா?

Tap to resize

1000 Babies

1000 பேபிஸ்:

இதை தொடர்ந்து, நாளை மலையாளத்தில் உருவாகியுள்ள வெப் தொடரான 1000 பேபிஸ் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. இதில் நடிகர் ரகுமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரை நீனா குப்தா இயக்கி உள்ளார். மருத்துவமனையில் ஒரே நேரத்தில் ஆயிரம் குழந்தைகள் இறந்து போக, அதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக வரும் ரகுமான் இதன் பின்னணியை கண்டுபிடிக்கிறாரா? குழந்தைகள் இறப்புக்கு பின்னல் உள்ள மர்மம் என்ன என்பதை திரில்லர் பாணியில் கூறியுள்ள படம் தான் 1000 பேபிஸ். இப்படம் நாளை டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Snakes and Ladders

ஸ்நேக்ஸ் & லேடர்:

குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கிய புதிய வெப் தொடர் தான் 'ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்'.  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது இந்த தொடர், மர்மங்கள் நிறைந்த திரில்லர் வெப் தொடராகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸ் நாளை அமேசான் பிரைமில் வெளியாகிறது. நாளை வேலையாக உள்ள ஒரே தமிழ் ஓடிடி தொடர் இது மட்டும் தான்.

டி.எம்.சௌந்தர்ராஜனை போண்டியாக்கிய டி.ராஜேந்தரின் ஒரே ஒரு பாடல்!
 

Soul Stories

சோல் ஸ்டோரீஸ்:

மலையாளத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடர், பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. சமீப காலமாக பெண்களை மையமாக வைத்து திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெறுகிறது. அந்த வங்கியில் இந்த படமும் பெண்களின் முக்கிய பிரச்சனை பற்றி பேசும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸ் நாளை மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kadaisi Ulaga Por Movie

கடைசி உலக போர்:

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி, தன்னுடைய  ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் மூலம், இயக்கி இசையமைத்து, நடித்திருந்த திரைப்படம் தான் 'கடைசி உலக போர்'. இந்த படத்தில் அனகா, நட்டி, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியான இந்த படம், எதிர்காலத்தில் நடக்கும் கதையை கற்பனையாக இயக்கி இருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றாலும், இவரின் முயற்சி பாராட்ட பட்டது. இந்த படம் ப்ரிமே ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

Kozhipannai Chelladurai

கோழிப்பண்ணை செல்லத்துரை:

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில்,  விஷன் சினிமா அவுஸ் தயாரிப்பில் செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியான இந்த படத்தில், ஏகன், சத்யா தேவி, பிரிகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கதையோடு கலந்து கிராமத்தின் அழகையும் காட்டும் சீனு ராமசாமி... சிறு வயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட அண்ணன் - தங்கைகளின் உணவு பூர்வமான பாசத்தையும், அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டத்தியும் இந்த படத்தில் கூறி இருந்தார். கோழிப்பண்ணை செல்லத்துரை
வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும், நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படம் அக்டோபர் 18-ஆம் தேதி சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Latest Videos

click me!