
சமீப காலமாகவே திரை உலகில், முன்னணி பிரபலங்களாக இருக்கும் நடிகர்கள், இசையமைப்பாளர்கள், அடுத்தடுத்து விவாகரத்து பெற்று பிரிவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா, ஜீவி பிரகாஷ் - சைந்தவி, ஜெயம் ரவி - ஆர்த்தி போல்... கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்த பிரபலம் தான் பாடகர் விஜய் யேசுதாஸ்.
தன்னுடைய தந்தை யேசுதாஸை தொடர்ந்து, சிறுவயதில் இருந்தே கர்நாடிக் இசை பயின்று... அமெரிக்காவிலும் இசை சம்மந்தமான படைப்பை படித்து முடித்த விஜய் ஏசுதாஸ், தமிழில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக யுவன் சங்கர் ராஜா, இளையராஜா, ஏ ஆர் ரகுமான், தேவா, வித்யாசாகர், எம் எம் கீரவாணி, ஹாரிஸ் ஜெயராஜ், ஜிவி பிரகாஷ், டி இமான், போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் சேர்ந்து பணியாற்றியுள்ளார்.
பிக்பாஸில் இப்படியும் நடக்கிறதா? ரஞ்சித் மனைவி பிரியா ராமன் கூறிய பகீர் தகவல்கள்!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள விஜய யேசுதாஸ்... தமிழில் 2000 ஆம் ஆண்டு குரோதம் 2 என்கிற படத்தில் 'பாபா பாபா' என்கிற பாடலை, தேவா இசையில் பாடினார். இதை தொடர்ந்து பிரெண்ட்ஸ் படத்தில் ருக்கு ருக்கு ரூப்புஜா, சொல்ல மறந்த கதை படத்தில் 'அம்மா சொன்ன', ஜெயம் படத்தில் 'கோடி கோடி' மின்னல்கள் என ஏராளமான பாடல்களை சூப்பர் ஹிட் பாடலை பாடினார்.
இவர் திருமணத்திற்கு, நடிகை திவ்யா பிள்ளையுடன் டேட்டிங் செய்து வந்த நிலையில்... 2007 ஆம் ஆண்டு தர்ஷனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தர்ஷனாவிடம் இருந்து விஜய் யேசுதாஸ் விவாகரத்து பெற்று தெரிந்தார். தன்னுடைய விவாகரத்து குறித்து இதுவரை எந்த ஒரு மீடியாவில் வாய் திறக்காத விஜய் யேசுதாஸ் தற்போது முதல் முறையாக பேசியுள்ளார்.
பின் வாங்கிய லப்பர் பந்து! அக்டோபர் 18 ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?
'ஐ அம் வித் தன்யா வர்மா' என்கிற youtube சேனலுக்கு விஜய் யேசுதாஸ் கொடுத்த பேட்டி ஒன்றில், மனைவி தர்ஷனா உடனான விவாகரத்து குறித்து பேசி உள்ளார். இதில் இருவரும் பரஸ்பர புரிதலுக்கு பின்னரே விவாகரத்து குறித்த முடிவை எடுத்ததாகவும், தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் வேதனையான முடிவு இது என்றும் தெரிவித்துள்ள விஜய், தற்போது வரை தன்னுடைய பெற்றோர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறி உள்ளார்.
நல்ல புரிதலுடன் பிரிந்தாலும், இதை பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். இது அவர்களுக்கு ஒரு வேதனையான விஷயம் தான். ஆனால் சினிமாவின் வெளிச்சத்தில் இருப்பதால், இதனை எவ்வளவு தூரம் மறைத்து வைக்க முடியும் என்றார். தொடர்ந்து பேசிய விஜய் யேசுதாஸ், தன்னுடைய குழந்தைகள் பற்றி பேசினார்.
தன்னுடைய மகளுக்கு 15 வயது ஆகிறது அவரால் ஓரளவு, எங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும், ஆனால் என் மகனுக்கு 9 வயது மட்டுமே ஆகிறது. அவனுக்கு இதை பற்றி சொல்லி புரிய வைக்க முடியாது. அதை புரிந்து கொள்ளும் வயதும் அவனுக்கு இல்லை அதை அவன் ஏற்று கொள்ள சில காலம் ஆகும்.
நேர்காணலின் முடிவில், "ஒரு நபர் தான் செய்த செயலுக்கு பொறுப்பேற்காவிட்டால், அனைத்தும் பயனற்றதாகிவிடும்"என்று விஜய் யேசுதாஸ் கூறியுள்ளதால் மூலம்... இந்த விவாகரத்தில் தன்னுடைய தவறும் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என்பது தெரிகிறது.
டி.எம்.சௌந்தர்ராஜனை போண்டியாக்கிய டி.ராஜேந்தரின் ஒரே ஒரு பாடல்!