'கார்த்திகை தீபம்' மற்றும் 'நீ நான் காதல்' ஆகிய இரு சீரியல்கள் செய்த சாதனையை தற்போது சேனல்கள் தரப்பு கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்களின் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நல்ல TRP-யுடன் ஒளிபரப்பானால் மட்டுமே அந்த சேனல் தொடர்ந்து சீரியலை டெலிகாஸ்ட் செய்யும், இல்லை என்றால் வந்த வேகத்திலேயே அந்த சீரியல்கள் முடிவுக்கு வந்துவிடும். குறிப்பாக 500 எபிசோடுகளை தாண்டி, சில சீரியல்கள் ஒளிபரப்பாகுவதே சமீப காலமாக ஆச்சர்யமாக தான் பார்க்கப்படுகிறது.
24
Vijay tv And Zee Tamil
அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் TRP -யில் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டு, ரசிகர்களின் ஆதரவோடு ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' தொடர் வெற்றிகரமாக 600 எபிசோடுகளை எட்டியுள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான தகவலை ஜீ தமிழ் தரப்பினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். 'செம்பருத்தி' சீரியலுக்கு பின்னர் கார்த்திகை தீபம் தொடர் தான் அதிகம் பார்க்கப்படும் சீரியலாக உள்ளது.
இந்த சீரியலை தற்போது கார்த்திக் என்பவர் இயக்கி வரும் நிலையில், சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் இயக்கி வருகிறார். ஹீரோயினாக ஆர்த்திகா நடித்து வருகிறார். எதிர்பாராத திருப்புமுனையுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், 1000 எபிசோடுகளை கடந்து ஓடவேண்டும் என ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
44
Nee Naan Kaadhal
அதே போல் விஜய் டிவியில் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட 'நீ நான் காதல்' சீரியல் வெற்றிகரமாக 250 எபிசோடுகளை எட்டியுள்ளது. இந்த மகிழ்ச்சியான விஷயத்தை சீரியல் குழுவினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். ரொமான்டிக் டிராமா ஜார்னல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், பிரேம் ஜாக்கோப் ஹீரோவாக நடிக்க, வர்ஷினி சுரேஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார். விறுவிறுப்பான கலைக்களத்தை கொண்ட இந்த தொடரும் பல எபிசோடுகளை கடந்து ஓட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.