விஜய் டிவியின் புதிய காதல் ஜோடி குறித்த தகவல் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சமீப காலமாகவே சீரியலில் ஒன்றாக இணைந்து நடிப்பவர்கள் அடுத்தடுத்து காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமாகி வருகிறது, அதிலும் விஜய் டிவி பிரபலங்கள் தான் அதிகம் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறுகிறார்கள், செந்தில் - ஸ்ரீஜா, ஆலியா மானசா - சஞ்சீவ், ஷ்ரேயா - சித்து, வைஷு - வெற்றி என சொல்லிக்கொண்டே போகலாம்.