ரகசியமாக காதலித்து கல்யாணத்துக்கு தயாரான ரம்யா பாண்டியன் - மாப்ள யார் தெரியுமா?

First Published | Oct 18, 2024, 2:13 PM IST

Ramya Pandian Marriage : ரகசியமாக காதலித்து வந்த நடிகை ரம்யா பாண்டியன், விரைவில் தன்னுடைய காதலனை கரம்பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Ramya Pandian

டம்மி டப்பாசு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இதையடுத்து ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற ரம்யா பாண்டியனுக்கு புகழ் வெளிச்சத்தை தேடித் தந்ததோடு, அவரை ஒரே நாளில் உச்சத்துக்கு கொண்டு சென்றது அவரின் மொட்டைமாடி போட்டோஷூட் தான். 

Actress Ramya Pandian

சேலையில் இடுப்பழகை காட்டி ரம்யா பாண்டியன் நடத்திய அந்த போட்டோஷூட் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனதோடு, அது ஒரு டிரெண்ட் செட்டராகவும் மாறியது. அவரை காப்பியடித்து மொட்டைமாடியில் போட்போஷூட் நடத்திய நடிகைகள் ஏராளம். ஆனால் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த வரவேற்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை.

Tap to resize

Ramya Pandian Marriage

மொட்டைமாடி போட்டோஷூட் பேமஸ் ஆன பின்னர் ரம்யா பாண்டியனை ரவுண்டு கட்டிய விஜய் டிவி அவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறக்கியது. அதில் இறுதிவரை சென்று நூலிழையில் டைட்டில் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்ட ரம்யாவுக்கு அடுத்ததாக பிக்பாஸ் வாய்ப்பு வந்தது.

Ramya Pandian Wedding

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ரம்யா, அதிலும் பைனல் வரை முன்னேறி அசத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கலக்கபோவது யாரு நிகழிச்சியில் நடுவராக இருந்த ரம்யா பாண்டியனுக்கு படிப்படியாக சினிமா வாய்ப்புகளும் வரத் தொடங்கின. குறிப்பாக சூர்யா தயாரித்த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்...  மாடர்ன் சரோஜா தேவியாக மாறி... சைடில் ஒத்த ரோசாவோடு போஸ் கொடுக்கும் ரம்யா பாண்டியன்!

Ramya Pandian Lover

அதன்பின்னர் சினிமாவில் பெரியளவில் வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். அதிலும் டைட்டில் வெல்லும் வாய்ப்பை ஜஸ்ட் மிஸ்ஸில் நழுவ விட்டார் ரம்யா. இப்படி சின்னத்திரையில் ஜொலித்த ரம்யா பாண்டியனுக்கு சினிமா வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவு வரவில்லை.

Ramya Pandian Marriage Date

இதனால் வேறுவழியின்றி கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆகும் முடிவுக்கு வந்துள்ளார் ரம்யா. இவரது திருமணம் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளதாம். இது லவ் மேரேஜ் என்றும் கூறப்படுகிறது. அவர் லோவல் தவான் என்கிற யோகா பயிற்சியாளரை அடுத்த மாதம் கரம்பிடிக்க உள்ளாராம்.

Ramya Pandian Love Marriage

நடிகை ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் யோகா பயிற்சி பெற்றார். அப்போது அங்கு பயிற்சியாளராக பணியாற்றி வரும் லோவல் தவானுக்கும் ரம்யா பாண்டியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. இதனால் குடும்பத்தினர் சம்மதத்துடன் தற்போது திருமணத்துக்கு தயாராகிவிட்டார் ரம்யா.

Ramya Pandian Wedding Date

ரம்யா பாண்டியனின் திருமணம் வருகிற நவம்பர் மாதம் 8ந் தேதி ரிஷிகேஷில் கங்கை நதி ஓரம் அமைந்துள்ள கோவிலில் வைத்து நடைபெற உள்ளதாம். அங்கு தான் லோவல் தவானை சந்தித்து காதல் வயப்பட்டதால் அங்கேயே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்களாம். இதையடுத்து நவம்பர் 15-ந் தேதி சென்னையில் இவர்களது திருமண வரவேற்பும் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்...  கோர் ஃபிட்னஸ் ரொம்ப முக்கியம்.. டைட்டான ஜிம் உடை.. வெறித்தனமான ஒர்கவுட் - தெறிக்கவிடும் ரம்யா பாண்டியன்!

Latest Videos

click me!