விஜய் வீட்டுக்கு பக்கத்தில் அடுத்தடுத்து வீடு வாங்கிய 3 பிரபலங்கள்! உண்மையாவே இது தான் காரணமா? ஆச்சர்ய தகவல்!

Published : Jun 13, 2023, 08:24 PM ISTUpdated : Jun 13, 2023, 08:28 PM IST

கோலிவுட் திரையுலகின் வசூல் மன்னனாக இருக்கும், தளபதி விஜய் ஆரியபுரத்தில் வீடு வாங்கிய விஷயம் அறிந்து, அடுத்தடுத்து மூன்று பிரபலங்கள் அவருடைய வீட்டிற்கு அருகிலும், அதே அப்பார்ட்மென்டிலும் வீடு வாங்கி உள்ளதாக, வெளியாகி உள்ள தகவல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.  

PREV
18
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் அடுத்தடுத்து வீடு வாங்கிய 3 பிரபலங்கள்! உண்மையாவே இது தான் காரணமா? ஆச்சர்ய தகவல்!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு தமிழ் திரையுலகில் எப்படி லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
 

28

இதன் காரணமாக சமீப காலமாக, இவருடைய படங்கள் மற்ற மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான, 'வாரிசு' திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

விஜய்ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு! படக்குழு வெளியிட்ட அப்டேட்!

38

இந்நிலையில் தளபதி விஜய் தன்னுடைய அலுவலக பணிக்காக சென்னை ஆரியபுரத்தில் பிரம்மாண்ட அப்பார்ட்மெண்ட் ஒன்றை மிகப்பெரிய தொகைக்கு வாங்கியதாக தகவல் வெளியானது. இவர் வீடு வாங்கிய தகவல் அறிந்து, அடுத்தடுத்து மூன்று பிரபலங்கள் அவருடைய அப்பார்ட்மெண்டிலும் அவர் அப்பார்ட்மெண்ட் அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையிலும் வீடு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

48

 இந்த வீடு வாங்கிய லிஸ்டில் ஒரு நடிகரின் பெயரும் இடம் பிடித்துள்ளது. அவர் வேறு யாரும் அல்ல, மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தான். அவர் தளபதி விஜய் வீடு வாங்கி உள்ள அப்பார்ட்மெண்டிலேயே, இருக்கும் வீடு ஒன்றை வாங்கி உள்ளாராம். கிட்டத்தட்ட 9000  சதுரடி அளவில், மிகப் பிரமாண்டமாக இருக்கும் இந்த வீட்டின் மதிப்பு சுமார் 30 கோடி என கூறப்படுகிறது.

விரைவில் இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகும் கணேஷ் வெங்கட்ராம்! கர்ப்பமாக இருக்கும் நிஷாவின் புகைப்படம் வைரல்!

58

இவர் வீடு வாங்கியதற்கான முக்கிய காரணம், மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும் இவரால் தமிழில் இதுவரை நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. ஒருவேளை விஜய்யின் அலுவலகத்தின் பக்கத்தில் வீடு வாங்கினால், பெரிய இயக்குனர்களின் கண்பார்வை நம் மீதும் படும் என்ற நம்பிக்கையில் தான் வாங்கி உள்ளாராம்.

68

இவரைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் உறவினரும், தயாரிப்பாளருமான ஸேவியர் பிரிட்டோ தளபதி வீட்டிற்கு அருகாமையில் வீட்டு வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.  இதற்கு காரணம் விஜய் மாஸ்டர் படத்தில் இவருடைய தயாரிப்பில் நடித்திருந்தாலும், இந்த படத்திற்கு பின்னர் இவருடைய தயாரிப்பில் நடிக்க தளபதி ஆர்வம் காட்டவில்லை. இப்படி வீடு வாங்கி அவ்வப்போது அவரில் கண்ணில் பட்டால், மீண்டும் விஜய்யை வைத்து படம் தயாரிக்கலாம் என்ற யோசனையில் தான் பல கோடி செலவு செய்து வீட்டை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

13 வயதில் பாலியல் சீண்டல்... கூட்ட நெரிசலில் அந்த இடத்தில் கை வைத்தார்! தனுஷ் பட நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்!
 

78

அதேபோல் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரும் இந்த லிஸ்டில் உள்ளார். கிரிக்கெட் வீரர் அஸ்வின் தான் விஜய்யின் அப்பார்ட்மெண்டில் வீடு ஒன்றை வாங்கி உள்ளாராம். அஸ்வின் விஜய்யின் தீவிர ரசிகர் என கூறப்படும் நிலையில், தளபதி அலுவலகம் இருக்கும் அப்பார்ட்மெண்டிலேயே வீடு வாங்கும் வாய்ப்பு கிடைத்தால் அதனை நழுவ விடுவாரா? கோடி கணக்கில் பணம் செலவு செய்து ஒரு வழியாக வாங்கி விட்டாராம். 
 

88

தளபதி அப்பார்ட்மென்டில் வீடு வாங்குவது எல்லாம் சரி தான்.. ஆனால் இதற்கான காரணங்கள் தான் எங்கேயோ இடிக்கிறது என, ஒரு வித குழப்பத்தோடு ஆச்சர்யமாக ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

குழந்தை பிறந்த குஷியில் கோயில்... கோயிலாக சுற்றும் பிரபு தேவா! இப்போ எங்க போயிருக்காரு தெரியுமா?
 

Read more Photos on
click me!

Recommended Stories