ராசியில்லையாம்.. அட்லீ இயக்கிய ஜவான் பட தலைப்பை கடைசி நேரத்தில் மாற்றிய ஷாருக்கான்! புதுதலைப்பு என்ன தெரியுமா?

First Published | Jun 13, 2023, 6:40 PM IST

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ஜவான் திரைப்படத்தின் தலைப்பு கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு உள்ளது.

பாலிவுட் திரையுலகின் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். ஜீரோ படத்தின் தோல்விக்கு பின்னர் அவர் நடிப்பில் ஐந்து ஆண்டுகளாக எந்த திரைப்படமும் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பதான் என்கிற அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் மாஸான கம்பேக் கொடுத்தார் ஷாருக்கான். பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன இது பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது. இந்திய அளவில் இந்த ஆண்டு ரிலீசான படங்களில் அதிக வசூல் குவித்த படம் என்கிற பெருமையையும் பதான் பெற்றுள்ளது.

பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் தான் ஜவான். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல், பிகில் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய அட்லீ தான் ஜவான் படத்தையும் இயக்கியுள்ளார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்க பிரியாமணி, யோகி பாபு சானியா ஐயப்பன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.


இந்தியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. இதனால் இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக ஜவான் மாறியுள்ளது. ஷாருக்கானும் அவரது மனைவி கௌரி கானும் தங்களது ரெட் சில்லிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... முடிவுக்கு வரும் குக் வித் கோமாளி; ஆரம்பமாகும் பிக்பாஸ் சீசன் 7 - ஆண்டவர் ஆட்டம் எப்போது? சுட சுட வந்த அப்டேட்

ஜவான் படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில், அப்படத்தின் தலைப்பு திடீரென மாற்றப்பட்டுள்ளது. இதனை படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அப்படத்தின் நாயகன் ஷாருக்கான் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது. ஷாருக்கான் நேற்று திடீரென ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இப்போது ஜவான் படம் குறித்த சில கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். அவர் அளித்த பதில்கள் மூலம் தான் ஜவான் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. அதன்படி Jawan பட தலைப்பில் கூடுதலாக ஒரு A சேர்க்கப்பட்டு Jawaan என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 

ஜோதிடப்படி பட தலைப்பில் AA இருந்தால் வெற்றி கிடைக்கும் என கூறப்பட்டதன் காரணமாக தான், ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான pathaan படத்தின் தலைப்பில் AA சேர்ந்து வெளியிட்டனர். அப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தற்போது அதேபோல் ஜவான் படத்தலைப்பிலும் AA சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... காசு பணமெல்லாம் வேணாம்... காதல் போதும்! இளம் நடிகர் மீதான காதலை கன்பார்ம் பண்ணிய தமன்னா - குவியும் வாழ்த்து

Latest Videos

click me!