பிரபல பாலிவுட் நடிகரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் சகோதரருமான அணில் கபூரின் மகள் சோனம் கபூர், கடந்த 2007 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக 'சாவரியா' என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய - தயாரித்திருந்தார்.
குறிப்பாக நடிகர் தனுஷ், பாலிவுட் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான 'ராஞ்சனா' படத்தில் சோனம் கபூர் தான் கதாநாயகியாக நடித்திருந்தார். முன்னணி நடிகையாக இருக்கும் போதே 2018 ஆம் ஆண்டு ஆனந்த் அகுஜா என்பவரை திருமணம் செய்து கொண்ட சோனம் கபூருக்கு தற்போது குழந்தை ஒன்றும் உள்ளது.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரையுலகில் கவனம் செலுத்தி வரும் இவர், மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது 'பிளைன்ட்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு, தி ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் பல பிரபலங்களுக்கு மத்தியில், தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து பகிர்ந்துள்ள தகவல், மீண்டும் பேசும் பொருளாக மாறி உள்ளது.
கவர்ச்சிக்கு ஓகே... தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் ஹீரோயின்ஸ்!
இந்த சம்பவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, "சோனம் கபூர் தனக்கு 13 வயது இருக்கும் போது மும்பையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு, தன்னுடைய நண்பர்களுடன் படம் பார்க்க சென்றுள்ளார். இடைவேளையின் போது ஸ்னாக்ஸ் வாங்குவதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கவே, அதனை பயன்படுத்திக் கொண்ட வக்கிர புத்தி கொண்ட மனிதர் ஒருவர், 13 வயதே ஆன குழந்தை என்றும் பார்க்காமல், சோனம் கபூரின் மார்பகங்களை பிடித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சோனம் கபூர் கை - கால்கள் நடுக்கம் எடுத்து அங்கேயே அழ துவங்கிவிட்டாராம். பின்னர் பின்னர் மீண்டும் படத்தை பார்த்ததாக கூறியுள்ளார். பல வருடங்கள் இந்த தகவலை யாரிடமும் கூறாமல் இருந்த நிலையில், தனக்குத் தானே தவறிழைத்தது போன்ற மனநிலையை கொண்டிருந்ததாகவும் சோனம் கபூர் தெரிவித்துள்ளார். மேலும் இதே போல் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தை பருவத்தில் ஏதேனும் ஒருவிதத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். தாங்களே தவறு செய்தது போன்ற குற்ற உணர்வுக்கு தள்ளப்படுகிறார்கள் என சோனம் கபூர் தெரிவித்தார். மேலும் இது குறித்து, இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ட இடத்தில் கை வைத்து.. ஐஸ்வர்யா ராய்யிடம் பளார் வாங்கிய தமிழ் நடிகர்? இவரா... அவரா... ஆராயும் நெட்டிசன்கள்!