தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் தமன்னா. அவர் நடிப்பில் தற்போது தமிழில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கிறார் தமன்னா. நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது : “லஸ்ட் ஸ்டோரீஸ் ஷூட்டிங்கின்போது தான் நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானோம். என்னோடு நிறைய நடிகர்கள் நடித்துள்ளார்கள். அவர்கள் மீது எனக்கு எந்தவித ஈர்ப்பும் வரவில்லை. ஆனால் விஜய் வர்மா உடன் வந்துள்ளது என்றால் அது ஸ்பெஷல் தான். நான் இவ்வளவு நாளாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் இவர் தான். யாருக்காக நம்மை மாற்றிக்கொள்ளவும் தயாராக இருக்கிறோமோ அவர் தான் நமக்கானவர். அப்படி விஜய் வர்மா எனக்கு உள்ளார். என்னுடைய மகிழ்ச்சியான இடமும் அவர்தான்” எனக்கூறி காதலை உறுதிப்படுத்தி உள்ளார் தமன்னா.
நடிகை தமன்னா புகழ்பெற்ற நடிகையாக இருந்தாலும், விஜய் வர்மா தற்போது தான் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். தமன்னாவுக்கு ரூ.110 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. ஆனால் விஜய் வர்மாவுக்கு ரூ.17 கோடி சொத்துக்கள் தான் உள்ளன. இதன்மூலம் காதலுக்கு முன் காசு பணமெல்லாம் ஒன்றுமில்லை என நிரூபித்துக்காட்டி இருக்கும் நடிகை தமன்னாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... குழந்தை பிறந்த குஷியில் கோயில்... கோயிலாக சுற்றும் பிரபு தேவா! இப்போ எங்க போயிருக்காரு தெரியுமா?