விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பேமஸ் ஆனது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி இதுவரை 8 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் டாப் 5 பைனலிஸ்ட் தேர்வாகி உள்ளனர். அந்த டாப் 5-ல் அபிஜித், பூஜா, அருணா, ப்ரியா மற்றும் பிரசன்னா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.