இசை அசுரன் ஜிவி பிரகாஷிற்கு இத்தனை கோடி சொத்து உள்ளதா? - பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல் இதோ

First Published | Jun 13, 2023, 1:52 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராவும் வலம் வந்துகொண்டிருக்கு ஜிவி பிரகாஷின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ். சிறுவயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்த ஜிவி-யை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது அவரது தாய் மாமா ஏ.ஆர்.ரகுமான் தான். அவர் இசையமைப்பில் வெளியான ஜெண்டில்மேன் படத்தில் இடம்பெறும் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடல் தான் ஜிவி பிரகாஷ் முதன்முதலில் பாடிய பாடலாகும். 

ஏ.ஆ.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரஹானாவின் மகன் தான் ஜிவி பிரகாஷ். சிறுவயதில் இருந்தே இசை மீது அதீத ஆர்வம் கொண்டிருந்த ஜிவி பிரகாஷை படிப்படியாக மெருகேற்றிய பெருமை ஏ.ஆர்.ரகுமானையே சேரும். இதையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜிவி. அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆக, யார்ரா இந்த பையன் என கோலிவுட்டே வியந்து பார்த்த ஒரு திறமைவாய்ந்த கலைஞன் தான் ஜிவி.


இதையடுத்து விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ், ஆயிரத்தில் ஒருவன் என்கிற மாஸ்டர் பீஸ் படத்திற்கு தன்னுடைய இசை மூலம் உயிர் கொடுத்திருந்தார். அந்த படத்திற்காக கடினமாக உழைத்தும் அதற்கான அங்கீகாரம் அந்த சமயத்தில் கிடைக்காவிட்டாலும், அப்படத்தையும், அதில் உள்ள இசையையும் ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கங்கனாவும் இல்ல; திரிஷாவும் இல்ல! 50-வது படத்திற்காக தேசிய விருது வென்ற நடிகையுடன் ரொமான்ஸ் பண்ண ரெடியான தனுஷ்

இசையில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜிவிக்கு படிப்படியாக நடிப்பின் மீது ஆர்வம் வந்தது. இதனால் டார்லிங் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜிவி அடுத்தடுத்து சில ஹிட் படங்களில் நடித்தார். பிசியான ஹீரோவான பின்னரும் சூரரைப் போற்று, வாத்தி என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார் ஜிவி. இத்தகைய திறமைமிக்க கலைஞனாக வலம் வரும் ஜிவி பிரகாஷிற்கு ரூ.75 கோடி சொத்து உள்ளதாம்.

இதுதவிர ஏராளமான சொகுசு கார்களையும் ஜிவி பிரகாஷ் வைத்துள்ளார். இவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தனது பள்ளி தோழியான பாடகி சைந்தவியை தான் ஜிவி பிரகாஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இன்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... டாடா முதல் போர் தொழில் வரை... 2023-ல் அறிமுக படத்திலேயே அதகளப்படுத்திய இளம் இயக்குனர்கள்

Latest Videos

click me!