டாடா முதல் போர் தொழில் வரை... 2023-ல் அறிமுக படத்திலேயே அதகளப்படுத்திய இளம் இயக்குனர்கள்

Published : Jun 13, 2023, 12:16 PM IST

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு முன்னணி இயக்குனர்களின் படங்களைக் காட்டிலும் அறிமுக இயக்குனர்களின் படங்கள் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
17
டாடா முதல் போர் தொழில் வரை... 2023-ல் அறிமுக படத்திலேயே அதகளப்படுத்திய இளம் இயக்குனர்கள்

சினிமாவின் வளர்ச்சி என்பது இளம் இயக்குனர்களின் கையில் தான் இருக்கிறது என ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களே சொல்லி கேட்டிருக்கிறோம். அதனை தற்போது கண்கூடாக பார்த்து வருகிறது தமிழ் சினிமா. தமிழில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் டாடா, அயோத்தி, போர் தொழில், யாத்திசை என தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய பல்வேறு இளம் இயக்குனர்கள் இயக்கிய படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

27

டாடா

கவின் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த திரைப்படம் தான் டாடா. இப்படத்தை கணேஷ் கே பாபு என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இதில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்திருந்தார். இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் தமிழகத்தில் ரிலீஸ் செய்தது. காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி, யதார்த்த வாழ்க்கைக்குள் நுழையும் போது எதிர்கொள்ளும் சிக்கல்களையும், பிரச்சனைகளையும் பற்றி விரிவாக பேசி இருந்தது இப்படம். வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ.20 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து வெற்றிகண்டது.

37

அயோத்தி

சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆன திரைப்படம் தான் அயோத்தி. மந்திர மூர்த்தி என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியிருந்த இப்படத்தில் புகழ், ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டிரைடண்ட் ஆர்ட் ரவீந்திரன் தயாரித்த இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்து இருந்தார். மனிதநேயத்தை உணர்த்தும் விதமாக ஆழமான கருத்துடன் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றுத்தந்ததோடு, நடிகர் சசிகுமாருக்கு கம்பேக் படமாகவும் அமைந்தது.

47

யாத்திசை

தரணி ராஜேந்திரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியிருந்த ஒரு பிரம்மாண்ட படைப்பு தான் இந்த யாத்திசை. பாண்டியர்களை மையமாக வைத்து உருவாகி இருந்த இந்த வரலாற்று திரைப்படத்தை வெறும் ரூ.7 முதல் 10 கோடி பட்ஜெட்டில் எடுத்து அசத்தி இருந்தனர். புதுமுக நடிகர்களை வைத்து இப்படி ஒரு அழுத்தமான படைப்பை கொடுக்க முடியுமா என கேட்டவர்களுக்கும், திறமை இருந்தால் முடியும் என இப்படத்தின் மூலம் நிரூபித்து காட்டி இருந்தார் தரணி. இப்படம் திரையரங்கில் மட்டுமல்லாது, ஓடிடியிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. 

இதையும் படியுங்கள்... ஹேமமாலினியோடு காதல்; ஸ்ரீதேவி, ரேகா உடன் ரகசிய உறவு - ரியல் லைஃப்பில் மாமாகுட்டியாக வலம் வந்த பிரபல நடிகர்

57

பிச்சைக்காரன் 2

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து, பின்னர் நடிகராக ஜொலித்த விஜய் ஆண்டனி, இந்த ஆண்டு இயக்குனராக அவதாரம் எடுத்து, அதில் வெற்றியும் கண்டுள்ளார். பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விஜய் ஆண்டனி, அப்படத்தை வெகுஜன மக்களுக்கு சென்று சேரும் வகையில், பக்கா கமர்ஷியல் படமாக எடுத்து வெற்றியடைந்துள்ளார். விமர்சன ரீதியாக இப்படம் சறுக்கினாலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியது. 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.35 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.

67

குட் நைட்

சிறந்த கதைக்களம் உள்ள படங்கள் மக்களை நிச்சயம் திருப்தி அடைய செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்த திரைப்படம் தான் குட் நைட். ஜெய் பீம் மணிகண்டன் நாயகனாக நடித்த இத்திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். குறட்டையை மையமாக வைத்து வித்தியாசமான கதைகளத்துடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை ருசித்தது.

77

போர் தொழில்

புதுமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியாகி திரையரங்கில் சக்கைப்போடு போட்டு வரும் லேட்டஸ்ட் திரைப்படம் தான் போர் தொழில். கிரைம் திரில்லர் வகை படமான இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது அதன் திரைக்கதை. ரசிகர்களை சோர்வடைய விடாமல் அடுத்தது என்ன என யோசிக்க வைத்து இறுதிவரை சீட் நுனியில் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் பக்காவாக எடுத்திருந்தார் விக்னேஷ் ராஜா. அடுத்த ராட்சசன் என சொல்லும் அளவுக்கு, பாராட்டு மழையில் நனைந்து வருகிறது போர் தொழில்.

இப்படி இளம் இயக்குனர்களின் வளர்ச்சியால் எழுச்சி கண்டுள்ள தமிழ் சினிமாவில், இன்னும் நிறைய புதுபுது படைப்புகளுடன் காத்துக்கொண்டிருக்கும் இளம் இயக்குனர்களுக்கு மேற்கண்ட படங்களின் வெற்றி ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதையும் படியுங்கள்... மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த 29 வயது நடிகை மூளைச்சாவு ஏற்பட்டு மரணம் - சோகத்தில் ரசிகர்கள்

Read more Photos on
click me!

Recommended Stories