70 மற்றும் 80 களில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஜீதேந்திரா. நடனம், நடிப்பு என அனைத்திலும் சிறந்து விளங்கிய ஜீதேந்திரா உடன் ஜோடியாக நடிக்க அனைத்து நடிகைகளும் போட்டிபோட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. ரீல் வாழ்க்கையில் கொடிகட்டிப்பறந்த ஜீதேந்திரா, ரியல் லைப்பில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளார். தனது நண்பரின் காதலியை திருமணம் செய்ய விரும்பியது முதல் முன்னணி நடிகைகளுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டது வரை அவரது தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருந்துள்ளது.
ஜீதேந்திரா, ரேகா
வி ஷாந்தராமின் நவரங் திரைப்படத்தின் மூலம் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக திரைப்படங்களில் அறிமுகமானார் ஜீதேந்திரா. ஆரம்பத்தில் 30 டேக்குகளுக்குப் பிறகும் டயலாக்கை சரியாக சொல்ல முடியாமல் திட்டு வாங்கிய ஜீதேந்திராவை, 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே இயக்குனர் அவரை கீத் காயா பதரோன் நே என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இதையடுத்து தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறிய ஜீதேந்திரா, பாலிவுட்டில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களில் நடித்தார்.
ஸ்ரீதேவி, ஜீதேந்திரா
ஷோபா சிப்பியை முதன்முதலில் 14 வயதில் சந்தித்தார் ஜீதேந்திரா. அவர்களின் நட்பு, காலப்போக்கில் காதலாக மாறியதால் இருவரும் 1974-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஷோபா விமானப் பணிப்பெண்ணானாக பணியாற்றி வந்தார். திருமணத்து பின்னரும் சினிமாவில் நடித்து வந்த ஜீதேந்திராவுக்கு பல்வேறு நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார்.
அதன்படி ஏக் பெச்சாரா படத்தில் நடித்த போது நடிகை ரேகாவுடன் நெருங்கி பழகினார் ஜீதேந்திரா. இவர்களது கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி படமும் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அவர்கள் இருவரும் மீண்டும் அனோகி அடா என்கிற படத்தில் நடித்தனர். அப்போது ரேகாவுடன் நெருக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர். தன்னுடன் பழகினாலும் ஷோபா உடனான உறவை முறிக்க ஜீதேந்திரா மறுத்ததால், அவருக்கு ரேகாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பிரிந்தனர்.
இதையும் படியுங்கள்... மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த 29 வயது நடிகை மூளைச்சாவு ஏற்பட்டு மரணம் - சோகத்தில் ரசிகர்கள்
ஹேமமாலினி, ஜீதேந்திரா
ரேகாவுக்குப் பிறகு நடிகை ஹேமமாலினி உடன் நெருக்கமாக பழகி வந்த ஜீதேந்திரா அவரை திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் நடிகை ஹேமமாலினி தன்னுடைய சுயசரிதையி, தன்னுடைய பெற்றோர் தான் ஜீதேந்திராவை தனக்கு திருமணம் செய்துவைக்க விரும்பியதாகவும், ஆனால் தாங்கள் காதலிக்கவில்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஷோபாவுடனான திருமணத்திற்குப் பிறகு ஸ்ரீதேவி மற்றும் ஜெயபிரதா ஆகிய நடிகைகள் உடனும் காதல் கிசுகிசுவில் சிக்கினார் ஜீதேந்திரா. இப்படி ரியல் லைஃப் மாமாகுட்டியாக வலம் வந்துள்ள நடிகர் ஜீதேந்திராவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மகன் துஷார் கபூர் தந்தையை போலவே பாலிவுட்டில் நடிகராக வலம் வருகிறார். அவரது மகள் ஏக்தா கபூர், தொலைக்காட்சித் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மும்பையில் செட்டில் ஆனது இதுக்குத்தானா! திடீரென இந்தி படத்தில் நடிக்க கமிட்டான சூர்யா- அப்போ வாடிவாசல் நிலைமை?