தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. கங்குவா திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கங்குவா படத்துக்கு பின் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பதாக இருந்தார் சூர்யா. ஆனால் விடுதலை 2-ம் பாகத்தின் ஷூட்டிங் முடிவடைய தாமதமாகும் என வெற்றிமாறன் கூறியதால், வாடிவாசல் படத்தை ஓரங்கட்டிவிட்டு, அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம் சூர்யா. கங்குவா பட ஷூட்டிங் முடிவடைந்ததும், சூர்யா - சுதா கொங்கரா இணையும் படத்துக்கான ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... காசுக்காக இப்படியா பண்ணுவீங்க? ஏ.ஆர்.ரகுமானை வெளுத்துவாங்கும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?
சுதா கொங்கரா படத்துக்கு பின்னரும் சூர்யா, வாடிவாசல் படத்தில் நடிக்கப்போவதில்லை என்கிற தகவல் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில், சுதா கொங்கரா படத்துக்கு பின்னர் சூர்யா, பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். அப்படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்க உள்ளதாகவும், வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு கர்ணா என பெயரிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாபாரதத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறதாம். சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ள இந்த பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங் 2024-ம் ஆண்டு தொடங்கும் என கூறப்படுகிறது. இதன்மூலம், 13 ஆண்டுகளுக்கு பின்னர் பாலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளார் சூர்யா. அவர் கடைசியாக ரத்த சரித்திரம் என்கிற இந்தி படத்தில் நடித்திருந்தார். இப்படி அடுத்தடுத்து வேறு இயக்குனர்களுடன் சூர்யா கூட்டணி அமைத்து வருவதால், வாடிவாசல் நிலைமை என்னாச்சு என தெரியாமல் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சிக்காக கமல் ஹாசனுடன் கை கோர்த்த இயக்குனர் எச்.வினோத்!