கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. சமீப காலமாக அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருவதால், தென்னிந்திய படங்களின் எண்ணிக்கையை குறைத்து வருகிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த போது, தலைவர் ரஜினிகாந்த் பக்கத்தில் நின்று கவர்ச்சி உடையில் கேக் வெட்டிய புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டது.
திரைப்படங்களை தாண்டி, வெப் சீரிஸ் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் தமன்னா... தற்போது ஹிந்தியில் உருவாகியுள்ள லஸ்ட் ஸ்டோரி 2-வில் நடித்துள்ளார். விஜய் வர்மாவுடன் எல்லை மீறிய படுக்கையறை காட்சியில் நடித்து ட்ரைலரிலேயே பிரமிக்க வைத்தார்.
இதை தொடர்ந்து இருவரும் ஜோடியாக ரொமாண்டிக் டின்னர் டேட்டிங் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.