கணேஷ் வெங்கட்ராமின் மனைவியும், நடிகையுமான நிஷா, 'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். இதை தொடர்ந்து 'முத்தாரம்', 'ஆபிஸ்', 'தெய்வமகள்', 'நெஞ்சம் மறப்பதில்லை' உள்ளிட்ட பல சீரியல்களை நடித்து பிரபலமானார்.
அதே போல் சன் சிங்கர், சூரிய வணக்கம், வணக்கம் தமிழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
பட வாய்ப்புக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட இவர், எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் மிகவும் நிதானமாக விளையாடினார். ஆனால் இவரின் விளையாட்டில் சுவாரஸ்யம் இல்லாத காரணத்தால், இவரின் வெற்றி வாய்ப்பு நழுவியது. எனினும் ஃபைனல் வரை சென்ற கணேஷ் வெங்கட் ராம் மூன்றாவது இடத்தை பிடித்தார்.
நிஷா - கணேஷ் வெங்கட்ராம் தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் தன்னுடைய பேபி பம்புடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.