ஐஸ்வர்யா:
நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவுக்கு, ரோஜா படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தபோது அதனை ஏற்காமல் தவிர்த்து விட்டு தற்போது வரை புலம்பி வருகிறார்.
சந்தியா:
சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு முதலில் சந்தியாவுக்கு தான் கிடைத்துள்ளது. கிராமத்து வேடம் என்பதால் அவர் ஏற்கவில்லையாம்.
வசுந்தரா தாஸ்:
அலைபாயுதே படத்தில் ஷாலினிக்கு முன் தேர்வு செய்யப்பட்டவர் வசுந்தரா தானம். ஆனால் அப்போது சில படங்களில் நடித்து கொண்டிருந்ததால் இந்த படத்தின் வாய்ப்பை தவறவிட்டு விட்டு பல நாள் புலம்பி தள்ளினாராம்.
தேவயானி:
படையப்பா படத்தில் நடிகை சவுந்தர்யா நடிக்கும் கதாபாத்திற்கு முதலில் தேர்வானவர் தேவயானி. அப்போது தெலுங்கில் பிசியாக நடித்ததால் இந்த பட வாய்ப்பபை தவற விட்டார்.
கீர்த்தி சுரேஷ்:
பொன்னியின் செல்வன் படத்தில், நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததது கீர்த்தி சுரேஷ் தான். ஆனால் மணிரத்னம் வருட கணக்கில் கால்ஷீட் கேட்டதால் கமிட் ஆன பின்னர் படத்தில் இருந்து விலகினார்.