மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, சாய் பல்லவி, அதிதி ஷங்கர் போலவே எம்பிபிஎஸ் படித்து முடித்துவிட்டு, நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் தற்போது திரையுலகில் இளம் நடிகைகளின் ஒருவராக உள்ளார்.
இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழில், கடந்த 2019-ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் ஜகமே தந்திரம், புத்தம் புத்தம் புது காலை விடியாதா, கார்கி, கேப்டன், கட்டா குஸ்தி, போன்ற படங்களில் அடுத்தடுத்த நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.
அஜித் இதுவரை எங்கெல்லாம் பைக் ரெய்டு செய்துள்ளார்? விலாவாரியாக மேப் போட்டு கட்டிய மேலாளர்!
இவருடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் விதமாக அமைந்த கதாபாத்திரம் என்றால் பொன்னியின் செல்வன் படத்தில் இவர் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் தான். பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி ஒன்றில் சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதன்படி சிறுவயதில், அதாவது ஆறாம் வகுப்பு படிக்கும் போதே... பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்-யை மனதளவில் காதலித்ததாகவும், ஆனால் அது ஒரு சிறு வயது கிரஷ் அவ்வளவு தான் என்று பேசியுள்ளார். மேலும் தற்போது கிரிக்கெட் பார்க்க நேரமில்லை என்பதையும் கூறியுள்ளார்.