cinema

நட்சத்திர ஜோடி:

கோலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான சினேகா - பிரசன்னா ஜோடி இன்று தங்களின் 11ஆம் ஆண்டு, திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள்.

Image credits: others

கியூட் காதல்:

நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடிக்கும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் முட்டி கொண்டது.

Image credits: others

திருமணம்:

வழக்கம் போல் இருவரும் காதலை மூடி மறைந்த நிலையில்... பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Image credits: others

அன்பின் அடையாளமான பிள்ளைகள்;

இவர்களின் காதலுக்கு அடையாளமாகவும், அன்பின் சாட்சியாகவும் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

Image credits: others

குறையாத காதல்:

snehaசினேகா - பிரசன்னா ஜோடிக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிய பின்னரும் இருவரும் குறையாத காதலுடன் இளம் ஜோடிகள் போல் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

Image credits: others

பிரசன்னாவின் வாழ்த்து:

திருமண நாளை முன்னிட்டு... மனைவி சினேகாவுடன் எடுத்து கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு, பூரித்த அன்பை வெளிப்படுத்தி இவர் போட்டுள்ள பதிவு லைக்குகளை குவித்து வருகிறது.

Image credits: others

ஏய் பொண்டாட்டி:

கியூட்டாக ஏய் பொண்டாட்டி இந்த சிறப்பு நாளில் உன்னிடம் சொல்ல விரும்புவது, என்னுடைய வாழ்க்கையில் பல திருப்பங்கள் இருந்தாலும், உன் கையை பிடித்துக் கொண்டு நிறைய கற்றுக் கொண்டேன். 

Image credits: others

நீ பக்கத்தில் இருந்தாய்:

உன்னுடன் நான் வந்த பயணத்திற்கு நன்றி. நான் கஷ்டங்கள் மற்றும் சவால்களை சந்தித்த போதெல்லாம் நீ என் பக்கத்தில் இருந்தாய். அதனால் கஷ்டம் என்னை எதுவும் செய்யவில்லை.

Image credits: others

ஒளி நீயானாய்:

உன்னுடைய அன்பு என்னை வழி நடத்தியது, எனக்கு ஏற்பட்ட இருள் அனைத்தையும் விரட்டும் ஒளி நீயாக மாறினாய். 

Image credits: others

விலைமதிப்பில்லா பரிசுகள்:

நீ என் மனைவியாக வந்ததற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன், நம் குழந்தைகள் விலை மதிப்பில்லா பரிசுகள் என்றும் தெரிவித்துள்ளார்.

Image credits: others

என் உலகத்தை அற்புதமாக்கினாய்:

கடவுளின் ஆசிர்வாதத்தால், உன்னுடைய அன்பால் உன்னுடைய புன்னகையால் என் உலகத்தை நீ அற்புதமாக மாற்றினாய்.  உன் கைகளைப் பிடித்துக் கொண்டு தொலைதூர  செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்

Image credits: others

விட்டுக்கொடுக்காக அன்பு:

என்னை ஒருபோதும் விட்டுக் கொடுக்காத உன் அன்பில் மீண்டும் ஒரு வருடம் கழிந்து உள்ளது. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள், என் அன்பே... என் கண்ணம்மா.... 

Image credits: others

சிறப்பாக வாழ்வோம்:

ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நொடியையும் நாம் சிறப்பாக வாழ்வோம். உன்னை நான் எப்போதும் காதலிக்கிறேன், நம் காதல் வலுவாகவும் உயர்ந்ததாகவும் இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

Image credits: others

வைரல் போட்டோஸ்:

அதே போல் இவர் பதிவிட்டுள்ள ரொமான்டிக் புகைப்படமும் வைரலாகி வருவதோடு, ரசிகர்களின் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.

Image credits: others

அழகுப் பதுமை ''ஸ்ரேயா கோஷல்''!

பருத்திவீரன் முத்தழகா இது! பளபளனு ஜொலிக்குறாங்களே.. வைரலாகும் போட்டோஸ்

போர் அடிக்குதா; Netflix-ல இந்த 7 திரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாருங்க

உள்ளாடை அணியாமல் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் தந்த வலிமை நாயகி ஹூமா குரேஷி