அஜித் இதுவரை எங்கெல்லாம் பைக் ரெய்டு செய்துள்ளார்? விலாவாரியாக மேப் போட்டு கட்டிய மேலாளர்!

First Published | May 11, 2023, 7:12 PM IST

அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள 'விடாமுயற்சி' படத்திற்காக தற்காலிகமாக பைக் பயணத்தை நிறுத்தியுள்ள நிலையில், அவர் எங்கெல்லாம் சென்றுள்ளார் என அவரின் மேலாளர் மேப்புடன் வெளியிட்டுள்ளார்.
 

நடிகர் அஜித் எந்த அளவுக்கு, பைக் ரெய்டு மீது ஆர்வம் கொண்டவர் என்பதை, சமீப காலமாக ரசிகர்களுக்கு நிரூபித்து வருகிறார். மெக்கானிக் வேலை முதல்... துப்பாக்கி சுடுதல் வரை தலக்கு அத்துப்படி என்றாலும், அதையெல்லாம் மீறிய ஒரு காதல், அஜித்துக்கு பைக் ரெய்டு மீது இருந்து வருகிறது. இதன் காரணமாக பல படங்களில் பைக் ரெய்டு காட்சிகளில் அஜித், டூப் போடாமல் நடிப்பதையும் வழக்குமாக வைத்துள்ளார்.
 

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாகவே, அஜித் உலகை பைக்கில் சுற்றி வரவேண்டும் என்கிற முயற்சியை கையில் எடுத்து அதனை செயல்படுத்தியும் வருகிறார். துணிவு படப்பிடிப்பின் போது கேப் கிடைக்கும் போதெல்லாம், பைக் ரெய்டில் ஈடுபட்ட... அஜித், படப்பிடிப்பு முடிந்த பின்னர் இமயமலையை ஒட்டியுள்ள பல்வேறு ஆன்மீக ஸ்தலங்கள் நிறைந்த இடங்களில் பைக் ரெய்டு செய்த போது , ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் படு வைரலாகின.

11-ஆவது திருமண நாளில் சினேகாவுடன் ரொமான்ஸ் செய்யும் பிரசன்னா! போட்டோஸ்
 

Tap to resize

இதை தொடர்ந்து, அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தாமதமாகிக்கொண்டே சென்றதால், நேபால் மற்றும் பூட்டான் ஆகிய இடங்களுக்கு அஜித் மீண்டும் தன்னுடைய பைக் பயணத்தை தொடர்ந்தார். 

இன்னும் ஓரிரு வாரங்களில், 'விடாமுயற்சி' படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள நிலையில்... அஜித் தற்காலிகமாக தன்னுடைய பைக் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா போட்டுள்ள பதிவில், "சவாலான நிலப்பரப்புகளில் சவாரி செய்து, தீவிர வானிலை நிலையை எதிர்கொண்டார் அஜித் சார்.  இந்திய மாநிலம் முழுவதும் சவாரி செய்து நேபாளம் மற்றும் பூடான் வரை பயணித்துள்ளார். அவரின் அடுத்த கட்ட உலக சுற்றுப்பயணம்,  நவம்பர் 2023 இல் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இனத்தினரை சாடி எடுகாட்டுள்ளதா இராவண கோட்டம்? பற்றி எரியும் பிரச்சனைக்கு படக்குழு விளக்கம்!

இந்த தகவலுடன், அஜித் இதுவரை இந்திய பகுதிகளில் எங்கெல்லாம் பைக் ரெய்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக, அவரின் பயணம் குறித்த மேப்  வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!