15 தினங்களுக்கு முன் நானே மாறனை தொலைபேசியில் ஸ்பெஷல் சோ பார்க்க அழைத்தேன். அப்போதாவது என்னிடம் இதை சொல்லி, என்னை திருத்தி மக்களை நான் ஏமாற்றுவதை தடுத்து இருக்கலாம் என கூறியுள்ளார் பார்த்திபன்.
சுயாதீன திரில்லர் திரைப்படம் எனக் கூறப்படும் இரவின் நிழல் படத்தை பார்த்திபன் தயாரித்து, எழுதி நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ரூத், உள்ளிட்டோர் முக்கிய இடத்தில் நடித்துள்ளனர். படத்தின் பின்னணி மற்றும் இசையை ஏ ஆர் ரகுமான் கவனித்துள்ளார். இந்த படம் முதல் ஆசிய நேரியல் அல்லாத ஒற்றை ஷாட் படமாக ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளது.
சிங்கிள் ஷாட் படமான இதன் கதை, போலீஸ் கைது செய்வதற்காக தேடும் நாயகன் ஒரு ஆசிரமத்தில் தஞ்சம் அடைகிறார். அதன் பின் அங்கிருந்து வெளியேறியவர் ஒரு பாழடைந்த கோவிலில் அமர்ந்தபடி தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கும் கதையாக அமைந்துள்ளது.
undefined
மேலும் செய்திகளுக்கு...சூரியின் விடுதலையில் விஜய் சேதுபதியின் மகன்...என்ன ரோலில் தெரியுமா?
இந்த படம் 75 ஏக்கர் நிலப்பரப்பில் 50 செட்டுகள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. சுமார் 90 நாட்கள் ஒத்திகைக்குப் பிறகு இந்த படப்பிடிப்பு நிகழ்ந்தது. கதை சொல்லுதல் முறையில் அமைந்த இந்த படம் முன்னும் பின்னுமான காலப்போக்கில் எடுக்கப்பட்டது. இந்த படத்தின் வெற்றி பட குழுவினரின் கடுமையான முயற்சியை சித்தரிப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர். கடந்த 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்குகளில் இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியதால் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது.
மேலும் செய்திகளுக்கு... ஒரிஜினல் கே.ஜி.எஃப்பில் தயாராகும் சீயான் 61..கமல் நெக்ஸ்ட் குறித்து துணுக்கு கொடுத்த பா ரஞ்சித்
இந்நிலையில் சர்ச்சை விமர்சனங்களுக்கு பெயர் போன ப்ளூ சட்டை மாறன், பார்த்திபனின் இரவில் நிழல் படம் குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 'இந்த படம் முதல் Non Linear சிங்கிள் ஷாட் படம் என்று பார்த்திபன் சொல்வது உண்மை இல்லை என தெரிவித்த மாறன். ஏற்கனவே 'ஃபிஸ் அண்ட் கேட்' என்கிற ஈரானிய திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு சிங்கள் ஷாட் படமாக வெளியாகியுள்ளது. என கூறி போஸ்டர்களையும் ப்ளூ ஷட்டை மாறன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த பதிவு மிகுந்த சர்ச்சை ஏற்படுத்தி வந்தது.
Parthiban claims that Iravin Nizhal is WORLD'S FIRST non linear singe shot film. But that is not true. It was Iranian film Fish & Cat 2013.
World's reputed film magazine agrees the same:
Fish & Cat experiments with nonlinear narrative - https://t.co/WoVtyvTAj3 pic.twitter.com/tbiHdU2GTW
மேலும் செய்திகளுக்கு...மீண்டும் வில்லனாகும் சூர்யா..இந்த முறை யாருடன் தெரியுமா?
இந்நிலைகள் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள பார்த்திபன், " நண்பர் ப்ளூ சட்டை மாறன் மாறுபட்ட விமர்சனத்தையும் பார்த்து விட்டேன். கூகுளில் மாறன் சொல்லும்படி Non Linear என்ற வரிசையில் எந்த படமும் இடம் பெறவில்லை. திரைப்பட விமர்சகர் சாய்பால் சட்டர்ஜி உள்ளிட்ட பலரிடம் படம் காட்டி உறுதி செய்து கொண்டேன். குறைந்தபட்சம் ஒரு வருடமாக இப்படத்தை the world first Non Linear சிங்கிள் ஷார்ட் மூவி என விளம்பரப்படுத்தி வரும் என்னிடம் அவரே இப்படி ஒரு படம் இருப்பதாக சொல்லி இருக்கலாம்.
விமர்சனங்கள் யாவும்
விமோசனங்கள் என நான் நன்றியுடன் நெகிழ,
சனங்களோ உலக level-ல் ஒன்றென உருக,
நண்பர் blue sattai மாறன் அவர்களின்
மாறுபட்ட விமர்சனத்தையும் பார்த்து விட்டு
படம் பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
அதுசரி!
எதுசரி என விளங்க!
More over..https://t.co/B0L6jbrSlo
15 தினங்களுக்கு முன் நானே மாறனை தொலைபேசியில் ஸ்பெஷல் சோ பார்க்க அழைத்தேன். அப்போதாவது என்னிடம் இதை சொல்லி, என்னை திருத்தி மக்களை நான் ஏமாற்றுவதை தடுத்து இருக்கலாம் என கூறியுள்ளார் பார்த்திபன். அதோடு அவர் படம் பார்க்க அழைத்த போது நான் போகவில்லை என்பது என் வருத்தமே. விமர்சகர் என்பதை மீறி இயக்குனர் என்பதால் அவர் மீது இன்றும் மரியாதை உள்ளது என குறிப்பிட்டுள்ளார் பார்த்திபன்.
Continue -More over..
Google-ல் அவர் சொல்லும் படம் ‘non-linear’என்ற வரிசையில் இல்லை.இன்றும்.
அவர் அளவுக்கு நான் அறிவுஜீவி இல்லை ! Film critic Mr saibal Chatterji உள்ளிட்ட பலரிடம் படம் காட்டி உறுதி செய்துக் கொண்டேன். குறைந்த பட்சம் ஒரு வருடமாக இப்படத்தை-continue