குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசன் முடிவுக்கு வந்தது... டைட்டிலை தட்டித்தூக்கியது யார் தெரியுமா?

Published : Jul 17, 2022, 01:18 PM IST
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசன் முடிவுக்கு வந்தது... டைட்டிலை தட்டித்தூக்கியது யார் தெரியுமா?

சுருக்கம்

Cook With Comali 3 : மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 சீசன் பைனல்ஸின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பேமஸ் ஆனது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் டைட்டில் வின்னர்கள் ஆகினர். தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இதில் அம்மு அபிராமி, ஸ்ருதிகா, தர்ஷன், வித்யுலேகா ஆகியோர் பைனலுக்கு முன்னேறி உள்ளனர். இந்த வாரம் நடைபெற்ற வைல்டு கார்ட் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் சந்தோஷ் பிரதாப் மற்றும் கிரேஸ் கருணாஸ் ஆகியோரும் பைனலுக்கு சென்றுள்ளனர்.

இதையும் படியுங்கள்...  வைரலாகும் கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் கிளாமர் லுக்...வர வர கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ.? நெட்டிசன்கள் புலம்பல்

இந்நிலையில் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியும் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்துவிட்டதாம். இதனை இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வரும் சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘பைனல்ஸ் ஷூட்டிங் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்ததாகவும், அனைவருக்கும் டாடா, அடுத்த சீசனில் பார்க்கலாம் என பதிவிட்டுள்ளார் சிவாங்கி.

இருப்பினும், இறுதிப்போட்டியில் வென்று டைட்டிலை ஜெயித்தது யார் என்கிற விவரத்தை சிவாங்கி வெளியிடவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் அந்த விஷயத்தை சீக்ரெட்டாக வைத்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க மக்களின் பேவரைட் ஷோ முடிவுக்கு வர உள்ளது அதன் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஷோவாக குக் வித் கோமாளி இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  ஒரிஜினல் கே.ஜி.எஃப்பில் தயாராகும் சீயான் 61..கமல் நெக்ஸ்ட் குறித்து துணுக்கு கொடுத்த பா ரஞ்சித்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மதுரை, மலப்புரம், மாண்டியாவிலிருந்து வரும் படங்களே உண்மையான தேசிய கலாச்சார சின்னங்கள்: கமல்ஹாசன் புகழாரம்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் கைது.. போலீசை எதிர்த்து கேள்வி கேட்டதால் நடவடிக்கை..!