இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் வீட்டில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம் - ஆறுதல் கூறும் ரசிகர்கள்

Published : Jul 17, 2022, 02:00 PM ISTUpdated : Jul 17, 2022, 03:29 PM IST
இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் வீட்டில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம் - ஆறுதல் கூறும் ரசிகர்கள்

சுருக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.எல்.விஜய்யின் குடும்பத்தில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம் அவரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான கிரீடம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். முதல் படத்திலேயே வெற்றியை ருசித்த இவர் அடுத்ததாக மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

குறிப்பாக விஜய்யின் தலைவா படத்தை இயக்கியபோது, அப்படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை அமலாபால் மீது காதல் வயப்பட்டார் விஜய். இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமண வாழ்க்கை மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கருத்துவேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு நடிகை அமலா பாலை விவாகரத்து செய்து பிரிந்தார் விஜய்.

இதையும் படியுங்கள்... மீண்டும் வில்லனாகும் சூர்யா..இந்த முறை யாருடன் தெரியுமா?

இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஐஸ்வர்யா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் ஏ.எல்.விஜய். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடைசியாக தலைவி படம் வெளியானது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 

இயக்குனர் ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் ஆவார். இந்நிலையில், இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் தாயார் வள்ளியம்மை இன்று காலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இதனால் ஏ.எல்.விஜய்யின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியா வாயிலாக இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசன் முடிவுக்கு வந்தது... டைட்டிலை தட்டித்தூக்கியது யார் தெரியுமா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!