மறைந்த நடிகர் சரத்பாபுவின் திருமண வாழ்க்கை.. அவரின் 2 மனைவிகள் யார் தெரியுமா?

Published : May 22, 2023, 03:53 PM ISTUpdated : May 22, 2023, 10:37 PM IST
மறைந்த நடிகர் சரத்பாபுவின் திருமண வாழ்க்கை.. அவரின் 2 மனைவிகள் யார் தெரியுமா?

சுருக்கம்

மறைந்த நடிகர் சரத்பாபுவின் திருமண வாழ்க்கை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரபல நடிகர் சரத்பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 71. செப்சிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று மதியம் காலமானார். அவரின் மறைவு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்களும், ரசிகர்களும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1970களில் தெலுங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் சரத்பாபு. எனினும் தமிழில் இவர் நடித்த நிழல் நிஜமாகிறது என்ற படத்தின் மூலம் பிரபலமானார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி கன்னடம், மலையாளம், ஹிந்தி படங்களிலும் அவர் நடித்துள்ளார். இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள சரத்பாபு, முன்னணி நடிகர்கள், முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி உள்ளார். மேலும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இதையும் படிங்க : கமல் முதல் அப்பாஸ் வரை.. சிம்ரனை காதலித்து கைவிட்ட ஹீரோஸ் - நடிகையின் சர்ச்சைக்குரிய லவ் லைஃப் பற்றி தெரியுமா?

குறிப்பாக நடிகர் ரஜினியின் நண்பராக சரத்பாபு நடித்த படங்கள் இன்றளவும் பலரின் ஃபேவரைட் படங்களாக உள்ளன. அதற்கு உதாரணமாக முத்து, அண்ணாமலை போன்ற பிளாக் பஸ்டர் படங்களை உதாரணமாக சொல்லலாம்.  

சரத்பாபுவின் திருமண வாழ்க்கை : நடிகர் சரத் பாபு, தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த பிரபல நடிகையான ரமா பிரபாவை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி 1971-ல் திருமணம் செய்து கொண்டது. எனினும் 1988-ல்  விவாகரத்து செய்தனர். பின்னர் சரத்பாபு, எம்.என் நம்பியாரின் மகள் சினேகலதா தீட்சித் என்பவரை நடிகர் சரத்பாபு திருமணம் செய்து கொண்டார். 1990- ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி 2011-ல் விவாகரத்து செய்து கொண்டனர்.

எனினும் தனது திருமணம் குறித்து பேசிய சரத் பாபு தான் முதலில் திருமணம் செய்துகொண்டது ஸ்னேகலதாவை தான் என்று கூறி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ தமிழ் நடிகர் எம்.என். நம்பியாரின் மகளான சினேகலதா என்பவரை பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தேன். ஆனால் ரமா பிரபா என்பவரை நான் திருமணம் செய்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவே இல்லை.” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : செப்சிஸ் நோய் பாதிப்பு... சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நடிகர் சரத்பாபு-

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!