ஜப்பான் நாட்டில் நடந்த ஒசாக்கா சர்வதேச பட விழாவில் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது..! முழு விருது பட்டியல்

By manimegalai a  |  First Published May 21, 2023, 9:34 PM IST

ஜப்பான் நாட்டில் நடந்த ஒசாக்கா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில், 2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 


ஜப்பானின் ஒவ்வொரு வருடமும், தமிழில் வெளியாகும் படங்களுக்கு பல்வேறு பட்டியல்களில் அடிப்படியில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் தற்போது 2019 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு ஒசாக்கா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில், விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் 2021 ஆம் வெளியான மாஸ்டர் படத்திற்காக நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதே போல் சிறந்த நடிகையாக, தலைவி படத்துக்காக கங்கனா தேர்வாகியுள்ளார். சிறந்த இசையமைப்பாளராக, மாநாடு படத்திற்காக யுவன் சங்கர் ராஜா தேர்வாகி உள்ளார். சிறந்த ஒளிப்பதிவாளராக, கர்ணன் படத்திற்காக  தேனீ ஈஸ்வர் விருதை தட்டி சென்றுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

எஸ்.பி.பி மற்றும் சித்ரா பாடிய 2500 பாடல்களுக்கு இசையமைத்த... இசையமைப்பாளர் ராஜ் அதிர்ச்சி மரணம்!

மேலும் சிறந்த இயக்குனராக 'சார்பட்டா பரம்பரை' படத்தை இயக்கிய பா ரஞ்சித் தேர்வாகியுள்ளார். அதை போல், சிறந்த ஸ்கிரீன் ப்ளே ரைட்டராக 'வெங்கட் பிரபு' மாநாடு படத்திற்காக தேர்வாகியுள்ளார். சிறந்த ப்ரொடக்ஷன் கம்பெனி ஆக ஒய் நாட் ஸ்டுடியோஸ், மண்டேலா படத்திற்காக விருதை வென்றுள்ளது, சிறந்த கோரியோகிராபராக 'மாஸ்டர்' படத்தில், வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் அமைத்த தினேஷ்குமார் தேர்வாகியுள்ளார். சிறந்த துணை நடிகராக, 'ஜெய் பீம்' படத்தில் நடித்த மணிகண்டனும், சிறந்த துணை நடிகையாக 'ஜெய் பீம்' படத்தில் நடித்த நடிகை லிஜோ மோல் தேர்வாகியுள்ளனர். அதேபோல் சிறந்த காமெடியனாக டாக்டர் படத்தில் நடித்த ரெடின் கிங்ஸ்லி தேர்வாக்கியுள்ளார். சிறந்த வில்லனாக, 'மாஸ்டர்' படத்தில் நடித்த விஜய் சேதுபதியும், சிறந்த குழந்தை நட்சத்திரமாக டாக்டர் படத்தில் நடித்த ஜாரா வினீத் தேர்வாகியுள்ளார்.

 

Awardees List 💐 pic.twitter.com/fWUMwUgcbW

— Osaka Tamil International Film Festival (@osaka_tamil)

 

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன், சுல்தான் படத்திற்காக விருதை வென்றுள்ளார். சிறந்த வி எப் எக்ஸ் காட்சிக்காக 'டெடி' படம் தேர்வாகி உள்ளது. மேலும் சிறந்த ஆட் டைரக்டருக்கான விருதை ராமலிங்கம் 'சார்பட்டா பரம்பரை' படத்திற்காக பெற்றுள்ளார்.சிறந்த சவுண்ட் டிசைனருக்கான விருது, அரண்மனை 3 படத்திற்கும், கூர்ந்து கவனிக்கப்பட்ட முக்கிய படமாக மண்டேலா படம் தேர்வாகியுள்ளது குறிப்பிட தக்கது. இதை தொடர்ந்து, விருதுகளை பெற்ற பிரபலங்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

குட்டி தேவதைகளுடன் எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய மோகன் லால்! புகைப்படத்துடன் வெளியிட்ட டச்சிங் பதிவு!

click me!