குட்டி தேவதைகளுடன் எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய மோகன் லால்! புகைப்படத்துடன் வெளியிட்ட டச்சிங் பதிவு!

Published : May 21, 2023, 04:42 PM IST
குட்டி தேவதைகளுடன் எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய மோகன் லால்! புகைப்படத்துடன் வெளியிட்ட டச்சிங் பதிவு!

சுருக்கம்

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், இன்று தன்னுடைய 63 வது பிறந்தநாளை குட்டி தேவதைகளின் முன்பு மிகவும் எளிமையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்டு அவர் போட்டுள்ள பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

மோகன்லால் மலையாள திரை உலகில் மட்டும் இன்றி, தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளனர்.  மலையாள திரை உலகில் எப்படி இவர் நடித்த படங்கள் அதிரிபுதிரி ஹிட் அடிக்கின்றனவோ, அதேபோல் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவருடைய படங்கள் அனைத்துமே தற்போது வரை ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.

நடிப்பை தாண்டி, உலகநாயகன் கமலஹாசன் தமிழில் எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரோ... அதேபோல் மலையாளத்தில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவருடைய நடிப்புக்கு பெருமை சேர்க்கும் விதமாக, நான்கு முறை தேசிய விருதையும், பல்வேறு ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார். அதேபோல் சிறந்த தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். கடந்த 2001 ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதைவழங்கியுள்ளது.

டீலில் விட்டாரா ரஜினிகாந்த்? மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி வைக்க முடிவெடுத்த இயக்குனர்.. பரபர தகவல்!

இவரைத் தொடர்ந்து, இவருடைய மகனும் ஒரு சில மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மோகன்லால், தன்னுடைய 63 வது பிறந்த நாளை மிகவும் எளிமையாக குட்டி தேவதைகள் முன்பு கொண்டாடி உள்ளார்.

'மாடர்ன் லவ் சென்னை' தொடரில் ஷோபாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்த... நடிகை ஸ்ரீ கௌரி பிரியா போட்டோஸ்!

இது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், குழந்தைகளுக்கு பிறந்த நாளை முன்னிட்டு பரிசுகளை கொடுப்பது போல் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு, HUM அறக்கட்டளையின் குட்டி தேவதைகள் முன்பு பிறந்தநாள் கொண்டாடியதை ஆசிர்வாதமாக நினைக்கிறேன். இந்த அறக்கட்டளை, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை வளர்த்து, சிறந்த எதிர்காலத்திற்காக அவர்களை மேம்படுத்துகிறது என தெரிவித்துள்ளார். இந்த நாளுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார் மோகன் லால். இவரின் இந்த பதிவு, தற்போது வைரலாகி வருகிறது. மேலும்  மோகன்லாலுக்கு திரை உலகை சேர்ந்த பலர், தொடர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்
விஜய் கட்சியில் சேரும் முக்கிய நடிகர்..! அவர் துணிவு ரொம்ப பிடிக்கும்னு பேட்டி