'பொன்னியின் செல்வன்' படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்படுகிறது.. விக்ரம், மணிரத்னத்துக்கு வக்கீல் நோட்டீஸ்!

By manimegalai a  |  First Published Jul 16, 2022, 4:16 PM IST

'பொன்னியின் செல்வன் 1' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், இதில் வரும் விக்ரமின் காட்சியை குறிப்பிட்டு, வரலாற்று உண்மைகள் மறக்கப்படுவதாக இயக்குனர் உள்ளிட்ட மூவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' படத்தை, பல்வேறு போராட்டங்களுக்கு பின் ஒருவழியாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம்... படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்ய புரமோஷன் பணிகளும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில்... இதில் விக்ரம் நடித்த காட்சியை குறிப்பிட்டு, 'பொன்னியின் செல்வன்' படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக கூறி  இயக்குனர் மணிரத்னம்  உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tap to resize

Latest Videos

இதுதொடர்பாக சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த செல்வம் என்பவர் அனுப்பியுள்ள நோட்டீசில், கூறப்பட்டுள்ளதாவது... "சோழ வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லாத நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்திய கரிகாலன் பாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் நெற்றியில் நாமம் இட்டுள்ளது போன்ற காட்சி அமைப்பு தவறானது என்றும், எனவே இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை மறைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்: ரக்சன் - ராஜலட்சுமியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் 3 முக்கிய பிரபலங்கள்? லேட்டஸ்ட் அப்டேட்..!
 

மேலும் இதேபோல இன்னும் எத்தனை வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளதை என்பதை படம் பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்றும், எனவே படத்தை வெளியிடும் முன் தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். தங்களுக்கு திரையிட்டு காட்டாமல் படத்தை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதா என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென அந்த வக்கீல் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: லலித் மோடியுடன் டேட்டிங்.. விரைவில் திருமணமா? ஒற்றை புகைப்படத்தை வெளியிட்டு உண்மையை போட்டுடைத்த சுஷ்மிதா சென்
 

சோழ வம்சத்தை வைத்து மணிரத்தனத்திற்கு  சரியாக படம் எடுத்திருந்தால் நாங்கள் விஸ்வாசமாக இருப்போம்,  ஒருவேளை சோழ வம்சத்தின் வரலாறு மறைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் விஸ்வரூபம் எடுப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது இயக்குனர் மணிரத்னம் தவிர, படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் மற்றும் படத்தில் நடித்துள்ள விக்ரம் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: 18 கோடிக்கு.. 14 டாப் மாடல் லக்ஸூரியஸ் கார்களை வாங்கி வைத்துள்ள தளபதி விஜய்! முழு விவரம் இதோ...
 

click me!