"ஃபாசிலின் குழந்தையும் என்னுடையது தான்"...கமல் சூர்யாவின் உணர்ச்சி பொங்கும் பதிவு! வைரலாகும் ட்ரைலர்

Published : Jul 16, 2022, 03:35 PM IST
"ஃபாசிலின் குழந்தையும் என்னுடையது தான்"...கமல்  சூர்யாவின்  உணர்ச்சி பொங்கும் பதிவு! வைரலாகும்  ட்ரைலர்

சுருக்கம்

சமீபத்தில் வெளியான கமலின் விக்ரம் படத்தில் ஃபஹத் பாஸில் ரகசிய காவல் உளவாளியாக நடித்திருப்பார். இவர்தான் முன்னாள் போலீஸ் அதிகாரிகளை கொலை செய்பவர் நாயகன் தான் என்பதை கண்டறிந்தவர்.

பிரபல மலையாள நடிகர் பகத் பாஸில் தற்போது "மலையன் குஞ்சு" என்னும் படத்தில் நடித்துள்ளார். திரில்லர் திரைப்படமான இதை  சஜிமோன் பிரபாகர் இயக்கியுள்ளார்.   இதில் ஃபஹத் பாசில் உடன் ரஜிஷா விஜயன் இந்திரன் , ஜாபர் இடுக்கி மற்றும் தீபக் பரம்போல் ஆகியோர் நடித்துள்ளனர். நாயகி ரஜிஷா விஜயன் தனுஷின் கர்ணன், சூர்யாவின் ஜெய்பீம் உள்ளிட்ட படங்களின் நடித்துள்ளார். தற்போது சர்தார் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்...லலித் மோடியின் காதலி சுஸ்மிதா சென்னின் டேட்டிங் லிஸ்ட்...இயக்குனர்கள் முதல் முன்னணி பிரபலங்கள் வரை !

மகேஷ் நாராயணன் என்பவர் எழுதியதோடு, ஒளிப்பதிவும் செய்துள்ளார். இந்த படத்திற்கு ஆர்ஜி பெண் படத்தொகுப்பு செய்ய  ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார்.  கேரளாவில் உயரமான பகுதிகளில் நடந்த நிலச்சரிவு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையையும் நிலச்சரிவால் அவர்கள் படும் இன்னல்களையும் இந்த படம் சித்தரிக்கிறது.

ஜூலை 22ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை ஃபஹத் பாஸில் மற்றும் நண்பர்கள் தயாரித்துள்ளனர் கடந்தாண்டு ஜனவரியில் துவங்கப்பட்ட இந்த படம் தற்போது படப்பிடிப்பு முடிந்து திரையிட தயாராகி வருகிறது. நூற்றாண்டு வெளியீடு என்னும் நிறுவனம் இந்த படத்தின்  விநியோகிக்கும் உரிமையை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்...என்னது..ஓசியில் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா - விக்கி? வெளியான பரபரப்பு தகவல்!

 

இந்நிலையில் மலையன் குஞ்சு படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. நிலச்சரிவின் மாட்டிக்கொள்ளும் நாயகன் படும் இன்னல்களும், அங்கிருந்து அவர் எப்படி தப்பிப்பார் என்பதுமே கதையாக இருக்கும் என தெரிகிறது.

இந்த ட்ரைலரை பாராட்டி உள்ள கமல், வெளியிட்டுள்ள பதிவில்,  ஃபஹத்தின் குழந்தையும் தன்னுடையது தா.ன் எப்பொழுதும் மேன்மை வெல்லட்டும். பகத் முன்னேறினார். எனது முகவர்கள் அனைவரும் வெற்றிபெற வேண்டும். தோல்வி என்பது ஒரு தேர்வு அல்ல ஒரு குழு என்றால் என்ன என்பதை காட்டுங்கள் என உணர்ச்சி பொங்கும் வார்த்தைகளை வெளியிட்டு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு...லலித் மோடியின் காதலி சுஸ்மிதா சென்னின் டேட்டிங் லிஸ்ட்...இயக்குனர்கள் முதல் முன்னணி பிரபலங்கள் வரை !

அதேபோல ஃபஹத்துக்கு  வாழ்த்து  தெரிவித்துள்ள சூர்யா.." ஃபஹத் உங்கள் கதைகளால் என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்துகிறீர்கள்..! இந்த வித்தியாசமான முயற்சியின் ஒளிப்பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.என குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்தில் வெளியான கமலின் விக்ரம் படத்தில் ஃபஹத் பாஸில் ரகசிய காவல் உளவாளியாக நடித்திருப்பார். இவர்தான் முன்னாள் போலீஸ் அதிகாரிகளை கொலை செய்பவர் நாயகன் தான் என்பதை கண்டறிந்தவர். பின்னர் விக்ரம் குறித்து அறிந்த பிறகு அவர்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்வார். இவரது நடிப்பு பாராட்டுக்களை பெற்றது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!