
தமிழ் சினிமாவில் எந்தவித பின்புலமும் இன்றி அறிமுகமாகி, தனது திறமையின் மூலமும், கடின உழைப்பின் மூலமும் படிப்படியாக முன்னேறி, இன்று மக்கள் மனதில் சூப்பர்ஸ்டாராக உயர்ந்து நிற்பவர் ரஜினிகாந்த். ஏராளமான இளம் தலைமுறையினருக்கு சினிமாவில் நடித்து சாதிக்க வேண்டும் என்கிற ஆசையை விதைத்த பெருமையும் இவரையே சேரும்.
இன்றைய தலைமுறையில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலர், இவரைப் பார்த்து தான் சினிமாவில் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களது ஆசையே சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினி மாதிரி ஆக வேண்டும் என்பது தான். அத்தகையை கனவுடன் சினிமாவில் பயணிக்கும் நடிகர்கள் ஏராளம்.
இதையும் படியுங்கள்... விஜய் பட இயக்குனரின் பிருந்தாவனம் நினைவாக பங்களா கட்டிய ஆர் ஆர் ஆர் நாயகன்!
சமீப காலமாக ரஜினியின் படத் தலைப்புகள் மீது முன்னணி நடிகர், நடிகர்களுக்கு ஒரு மோகம் வந்துள்ளது. ரஜினி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்களின் தலைப்பு தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரஜினி நடித்த 23 படங்களின் தலைப்புகள் தற்போது ரிப்பீட் செய்யப்பட்டு உள்ளன.
அவற்றின் விவரங்களை பார்க்கலாம். “தனுஷ் நடித்த படிக்காதவன், பொல்லாதவன், தங்கமகன், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், மாவீரன், கிருஷ்ணா நடித்த வீரா, கழுகு, சிபிராஜ் நடிப்பில் வெளியான போக்கிரி ராஜா, ரங்கா, சத்யராஜின் குரு சிஷ்யன், உதயநிதி நடித்த மனிதன், விஷாலின் நான் சிகப்பு மனிதன், கார்த்தி நடித்த நான் மகான் அல்ல, விஜய் ஆண்டனியின் காளி, பிரித்விராஜ் நடித்த நினைத்தாலே இனிக்கும், நயன்தாராவின் நெற்றிக்கண், ஜிவி பிரகாஷின் குப்பத்து ராஜா, ஆயிரம் ஜென்மங்கள், திரிஷாவின் கர்ஜனை மற்றும் வெற்றிமாறனின் விடுதலை ஆகிய படங்கள் ரஜினி பட தலைப்பை ரிப்பீட் செய்து வந்துள்ளன.
இதையும் படியுங்கள்... கவர்ச்சியை வாரி இறைக்கும் ‘வாரிசு’ நடிகை... விருது விழாவிற்கு ரெட் ஹாட் உடையில் வந்து அதகளப்படுத்திய ராஷ்மிகா
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.