
சினிமாவில் புதுப்புது முயற்சிகளை மேற்கொள்வதில் முதன்மையானவர் பார்த்திபன். அந்த வகையில் அவர் இயக்கிய படம் தான் இரவின் நிழல். இப்படத்தை அவர் ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளார். குறிப்பாக உலகிலேயே Non Linear முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் இந்த இரவின் நிழல் எனவும் பார்த்திபன் பல்வேறு பேட்டிகளில் கூறி இருந்தார்.
இதனால் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. குறிப்பாக இப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சியும் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பார்த்திபனின் இந்த முயற்சியை வியந்து பாராட்டினர்.
இதையும் படியுங்கள்... சூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ண பாலிவுட்டில் இருந்து கவர்ச்சி நடிகையை களமிறக்கிய சிறுத்தை சிவா..!
படம் உலகத்தரத்தில் இருப்பதாகவும் பாராட்டு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இப்படத்திற்காக பார்த்திபனுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர். முதல் நாளில் பெரும்பாலான இடங்களில் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியதால் பாக்ஸ் ஆபிஸிலும் நன்கு வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் மீது பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி இப்படத்தை உலகின் முதல் Non Linear சிங்கிள் ஷாட் படம் என்று பார்த்திபன் சொல்வது உண்மையில்லை என பதிவிட்டுள்ள மாறன், ஏற்கனவே Fish & Cat என்கிற ஈரானிய திரைப்படம் கடந்த 2013-ம் ஆண்டே இதே Non Linear முறையில் சிங்கிள் ஷாட் படமாக எடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... Chiyaan 61 : விக்ரம் - பா.இரஞ்சித் கூட்டணியில் இணைந்த ஜிவி பிரகாஷ்... பூஜையுடன் தொடங்கியது ‘சியான் 61’ படம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.