
நடிகர், இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் வெற்றிகண்டவர் பிரதாப் போத்தன். கடந்த சில ஆண்டுகளாக இவர் படம் இயக்காமல் இருந்தாலும், பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று காலை உயிரிழந்தார். சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோதே அவரது உயிர் பிரிந்தது. பிரதாப் போத்தனின் மறைவு திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்... இறப்பதற்கு முன்பே மரணம் குறித்தும்... வாழ்க்கையின் தத்துவத்தையும் முகநூல் பதிவில் கூறிய பிரதாப் போத்தன்!
நடிகர்கள் கார்த்தி, கமல்ஹாசன், பிரபு, இயக்குனர்கள் மணிரத்னம், சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளர்கள் பிசி ஸ்ரீராம், ராஜிவ் மேனன், நடிகை கனிகா ஆகியோர் பிரதாப் போத்தன் உடலுக்கு நேற்று நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று நடிகர் சத்யராஜ், நடிகை ரேவதி, நடிகர் சின்னி ஜெயந்த் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை 10 மணியளவில் சென்னை கீழ்பாக்கத்தில் இருந்து அருகில் உள்ள வேலங்காடு மயானத்துக்கு பிரதாப் போத்தனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர். இதையடுத்து உறவினர்கள் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகளை செய்த பின்னர், பிரதாப் போத்தனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்... நடிகை ராதிகாவை ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த பிரதாப் போத்தன்... ஒரே ஆண்டில் விவாகரத்து செய்தது ஏன்?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.