பச்சை நிற ஸ்லீவ் லெஸ் உடையில்... நயன்தாராவின் பாடலுக்கு கடல்நீரில் ஆட்டம் போட்ட ஷிவானி! வீடியோ

By manimegalai aFirst Published Mar 28, 2021, 1:53 PM IST
Highlights

நடிகை நயன்தாராவின் ஹெலன்னா பாடலுக்கு செம்ம ஸ்டைலிஷாக தண்ணீரில் நின்றபடி ஆட்டம் போட்டு, ஷிவானி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தன்னுடைய 17 வயதிலேயே சீரியல் ஹீரோயினாக விஜய் டிவி தொலைக்காட்சியில், கலக்கியவர் ஷிவானி. இவர் நடித்த ''பகல் நிலவு' சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சின்னத்திரையில் சேலை கட்டிய குயிலாக வலம் வந்த ஷிவானி, திடீர் என மாடர்ன் உடைக்கு மாறி, இன்ஸ்டாகிராம் பக்கத்தையே கவர்ச்சியால் தீ மூட்டினார். எனவே இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே தற்போது உள்ளது. இவர் எந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டாலும் லைக்குகள் அள்ளுகிறது.

சீரியலை தாண்டி ஷிவானியை, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது என்றால், அது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஜனவரி மாதம் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான். இதில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு, காதல் கிசுகிசுவில் சிக்கினாலும், நாசுக்காக அதில் இருந்து நகர்ந்தார்.

மேலும் செய்திகள்: பாத் டப்பில்... உடையாக மாறிய சோப்பு நுரை..! படு மோசமாக கவர்ச்சி போஸ் கொடுத்த டிக்டாக் இலக்கியா!
 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே, சரியாக 4 மணி ஆகிவிட்டால்... செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர், சில நாட்கள் எந்த புகைப்படமும் வெளியிடாமல் இருந்த ஷிவானி, ரசிகர்களின் அன்பு கோரிக்கையை ஏற்று கொண்டு, மீண்டும் புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

மேலும் செய்திகள்: 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் செம்ம ட்விஸ்ட்..! வயல் கார்டு சுற்றில் இருந்து ஃபைனலுக்கு சென்ற இருவர்!
 

தற்போது ஷிவானி கவர்ச்சி புயல், மாலத்தீவின் பக்கம் கரை ஒதுங்கியுள்ளது. தண்ணீரில் நின்றபடி ஸ்விம்மிங் சூட், உள்ளிட்ட விதவிதமான உடையில் கவர்ச்சி அலப்பறை செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாராவின் ஹெலன்னா பாடலுக்கு செம்ம ஸ்டைலிஷாக தண்ணீரில் நின்றபடி ஆட்டம் போட்டு, ஷிவானி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ இதோ...


 

 

click me!