பளீச்சென தெரியும் பாதி உடல்... ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் அதிரடி கவர்ச்சி காட்டிய ஆன்ட்ரியா...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 12, 2020, 6:20 PM IST
Highlights

பிரபல நிறுவனத்தின் போஸ்டருக்காக கறுப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் உடை, ஹைஹீல்ஸ் சகிதமாக அரேபியன் குதிரை போல் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் ஆன்ட்ரியா.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆன்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் “தரமணி” படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. அதன் மூலம் கமலுடன்  “விஸ்வரூபம்” படத்தின் முதலாவது மற்றும் 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் உடன் ஆன்ட்ரியா நடித்த  “வடசென்னை” திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 

இதையும் படிங்க: 

இடையில் இசையமைப்பாளர் அனிருத் உடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே திருமணமான நடிகருடன் உறவில் இருந்ததாகவும், அதனால் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஆன்ட்ரியா பல மாதங்கள் சிகிச்சையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. அந்த சம்பவத்தால் மனம் உடைந்த ஆன்ட்ரியா சினிமாவில் நடிக்காமல் இருந்தார். 

இதையும் படிங்க: நிறைவேறாமல் போன சிரஞ்சீவி சார்ஜாவின் கடைசி ஆசை... கண்ணீரை வரவழைக்கும் வாட்ஸ் அப் மெசெஜ்...!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “மாஸ்டர்” படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் ஆன்ட்ரியாவிற்கு  முக்கிய கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. ஆன்ட்ரியா லீட் ரோலில் நடித்திருக்கும் “கா” படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி அரண்மனை 3, மாளிகை ஆகிய படங்களும் ஆன்ட்ரியா கைவசம் உள்ளன. தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் ஆன்ட்ரியா
கேக், பிஸ்கட் போன்ற விதவிதமான ஐட்டங்களை சமைத்து, அதன் போட்டோஸை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். 

இதையும் படிங்க: 

பிரபல நிறுவனத்தின் போஸ்டருக்காக கறுப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் உடை, ஹைஹீல்ஸ் சகிதமாக அரேபியன் குதிரை போல் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் ஆன்ட்ரியா. ஜிகுஜிகுவென ஜொலிக்கும் அந்த உடையில் ஆன்ட்ரியாவின் பாதி உடல் பளீச்சென தெரிவது ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஏற்கனவே சிக்கென ஸ்லிம் லுக்கில் இருக்கும் ஆன்ட்ரியா சாதாரண போட்டோஸை வெளியிட்டாலே லைக்குகள் பிச்சிக்கும், அப்படியிருக்க இப்படி ஒரு உடையில் போஸ் கொடுத்தால் சொல்ல வேண்டுமா என்ன?... 

 

 

click me!