Tamil News Live Updates: மக்களவைத் தேர்தல்... பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது!

Breaking Tamil News Live Updates on 22 March 2024 tvk

மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகளில், 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா, அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார், கடலூர் - தங்கர் பச்சான், மயிலாடுதுறை  - ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார், தருமபுரி - அரசாங்கம்
சேலம் - ந. அண்ணாதுரை விழுப்புரம் - முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காஞ்சிபுரம் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

9:35 PM IST

காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் அறிவிப்பு!

காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார்

9:09 PM IST

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர்: யார் இந்த வி.எஸ்.நந்தினி?

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக வி.எஸ்.நந்தினி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்

8:13 PM IST

தோல்வி பயத்தில் பிரதமருக்குத்தான் தூக்கம் வரவில்லை: தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்!

தோல்வி பயத்தில் பிரதமருக்குத்தான் தூக்கம் வரவில்லை என திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

7:26 PM IST

தமிழர்கள் குறித்து சர்ச்சை கருத்து; பாஜக அமைச்சர் ஷோபா மீதான விசாரணைக்கு தடை!

தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக மத்திய அமைச்சர் ஷோபா மீதான வழக்கு விசாரணைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

5:34 PM IST

கடலூரில் பாமக வேட்பாளர் நான் தான்: இயக்குனர் தங்கர்பச்சான் விளக்கம்!

கடலூரில் பாமக வேட்பாளர் நான் தான் போட்டியிடுகிறேன் என இயக்குனர் தங்கர்பச்சான் விளக்கம் அளித்துள்ளார்

4:56 PM IST

பாசிச சக்திகளின் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுப்போம்: முதல்வர் ஸ்டாலின்!

பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

4:08 PM IST

உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பொன்முடி பதவியேற்பு!

தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும்  பதவியேற்றுக் கொண்டார்.
 
3:48 PM IST

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருதுநகரில் விஜயகாந்த் மகன் போட்டி!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

3:17 PM IST

கழற்றிவிடப்பட்ட விஜயதாரணி: பாஜகவில் சீட் மறுப்பு!

காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்ற விஜயதாரணிக்கு மக்களவை, சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை

2:54 PM IST

வங்கியில் ரூ.1 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்யலாமா? என்ன சொல்கிறது தேர்தல் கமிஷன் விதி.?

ரூ.1 லட்சத்திற்கு மேல் டெபாசிட் மற்றும் திரும்பப் பெறுதல் பற்றிய பெரிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. லோக்சபா தேர்தலின் போது வங்கிகளுக்கு தேர்தல் கமிஷன் சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

2:45 PM IST

அரவிந்த் கெஜ்ரிவால் கைது: மம்தா பானர்ஜி கண்டனம்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்

2:41 PM IST

எல்பிஜி கேஸ் சிலிண்டரை இலவசமாக பெற முடியும்.. அரசின் இந்த திட்டம் உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டரை தற்போது இலவசமாக வாங்க முடியும். அது எப்படி என்று அது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

1:11 PM IST

சொந்தமாக ஒரு கார் இல்லை… ஆனால் பல கோடிகளுக்கு அதிபதி.. அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு எவ்வளவு?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோடிக்கணக்கான சொத்துக்கு சொந்தக்காரர் ஆவார். அவருக்கு சொந்தமாக கார் இல்லை என்பது உங்களுக்கும் தெரியுமா? அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

12:33 PM IST

44W பாஸ்ட் சார்ஜிங்.. 50 எம்பி கேமரா.. 20 ஆயிரம் கூட இல்லை.. பட்டையை கிளப்பும் விவோ டி3 5ஜி மொபைல்..!

விவோ டி3 5ஜி மொபைல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

12:00 PM IST

சென்னையில் வெடித்த மர்மப்பொருள்.. ப்ளஸ் 2 மாணவன் செய்த ஆய்வில் நேர்ந்த விபரீதம்.. பள்ளி மாணவன் பலி.!

சென்னையில் பாஸ்பரஸ் வெடித்து ப்ளஸ் 2 மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

11:32 AM IST

ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ.. டபுள் பேட்டரி.. டபுள் ரேஞ்ச்.. இப்படியொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கா..

முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான கோமாகி நிறுவனம் இரட்டை பேட்டரி ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

11:20 AM IST

#BREAKING: 2ஜி வழக்கு.. ஆ.ராசாவுக்கு, கனிமொழிக்கு சிக்கல்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

11:16 AM IST

அஜித் தெலுங்கு தயாரிப்பாளரை தேடி ஓடியது இதுக்காக தானா? குட் பேட் அக்லி படத்துக்காக AK வாங்கும் சம்பளம் இவ்வளவா

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட் அக்லி படத்திற்காக நடிகர் அஜித் குமாருக்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம்.

11:03 AM IST

மெக்சிகன் தொழிலதிபர் கிரேசியா முனோஸை திருமணம் செய்தார் சோமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல்..!

சோமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல், மெக்சிகன் தொழிலதிபர் கிரேசியா முனோஸை திருமணம் செய்துள்ளார்.

10:32 AM IST

2 நாள் பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி.. இந்திய பிரதமரை கோலாகலமாக வரவேற்ற பூடான் அரசு..

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூடானுக்கு வெள்ளிக்கிழமையான இன்று காலை பூடான் சென்றடைந்தார்.

10:15 AM IST

ஃபேஸ்புக்.. இன்ஸ்டாகிராம்.. பயன்படுத்த இனி கட்டணம்.. மொபைல் பயனர்கள் அதிர்ச்சி..

ஃபேஸ்புக் - இன்ஸ்டாகிராம் தளத்தைப் பயன்படுத்துவதற்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

10:08 AM IST

மக்களவைத் தேர்தல்... பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகளில், 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா, அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார், கடலூர் - தங்கர் பச்சான், மயிலாடுதுறை  - ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார், தருமபுரி - அரசாங்கம்
சேலம் - ந. அண்ணாதுரை விழுப்புரம் - முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காஞ்சிபுரம் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

9:38 AM IST

ஐ அம் வெயிட்டிங்! துப்பாக்கி பட பாணியில் அண்ணாமலையை சீண்டிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்!

கோவை தொகுதி வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் துப்பாக்கி பட பாணியில் வரவேற்றுள்ளார். 

9:38 AM IST

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி.! சென்னையில் இன்றும், மார்ச் 26ம் தேதியும் போக்குவரத்து மாற்றம்.!

ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு சென்னையில் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு, பெல்ஸ் சாலை உள்ளிட்ட சாலைகளில் இன்று மற்றும் மார்ச் 26ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

9:05 AM IST

சென்னை வெள்ளம்.. தூத்துக்குடி வெள்ளம்.. எவ்வளவு தண்ணீர் வந்தாலும் அசால்ட்டாக இந்த ஸ்கூட்டரை ஓட்டலாம்..

ஏதர் ரிஸ்ட்டா குடும்ப மின்சார ஸ்கூட்டர் ஏப்ரல் 6 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

8:40 AM IST

Inimel Song : கமல் மகளுடன் கண்டமேனிக்கு ரொமான்ஸ் செய்த லோகேஷ் கனகராஜ்... பங்கமாக கலாய்த்த விக்ரம் பட நடிகை

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இனிமேல் எனும் ஆல்பம் பாடலில் கமல் மகள் ஸ்ருதிஹாசன் உடன் ரொமான்ஸ் செய்ததை நடிகை காயத்ரி கலாய்த்துள்ளார்.

8:06 AM IST

நான் இருக்கேன் கவலைப்படாதீங்க.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. களத்தில் குதித்த ராகுல் காந்தி.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. ராகுல் காந்தி முதல் முதல்வர் மு.க ஸ்டாலின் வரை என பலரும் கடும் கண்டனங்களை பாஜக அரசுக்கும், அமலாக்கத்துறைக்கும் தெரிவித்து வருகின்றனர்.

7:33 AM IST

Lok Sabha Elections 2024: வைரலான வீடியோ.. நாமக்கல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் அதிரடி மாற்றம்.!

நாமக்கல் மக்களவை தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக சூரியமூர்த்தி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாதேஷ்வரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

7:32 AM IST

School College Holiday: பங்குனி உத்திர திருவிழா.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 25ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

9:35 PM IST:

காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார்

9:09 PM IST:

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக வி.எஸ்.நந்தினி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்

8:13 PM IST:

தோல்வி பயத்தில் பிரதமருக்குத்தான் தூக்கம் வரவில்லை என திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

7:26 PM IST:

தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக மத்திய அமைச்சர் ஷோபா மீதான வழக்கு விசாரணைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

5:34 PM IST:

கடலூரில் பாமக வேட்பாளர் நான் தான் போட்டியிடுகிறேன் என இயக்குனர் தங்கர்பச்சான் விளக்கம் அளித்துள்ளார்

4:56 PM IST:

பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

4:08 PM IST:

தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும்  பதவியேற்றுக் கொண்டார்.
 
3:48 PM IST:

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

3:17 PM IST:

காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்ற விஜயதாரணிக்கு மக்களவை, சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை

2:54 PM IST:

ரூ.1 லட்சத்திற்கு மேல் டெபாசிட் மற்றும் திரும்பப் பெறுதல் பற்றிய பெரிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. லோக்சபா தேர்தலின் போது வங்கிகளுக்கு தேர்தல் கமிஷன் சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

2:45 PM IST:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்

2:41 PM IST:

நீங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டரை தற்போது இலவசமாக வாங்க முடியும். அது எப்படி என்று அது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

1:11 PM IST:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோடிக்கணக்கான சொத்துக்கு சொந்தக்காரர் ஆவார். அவருக்கு சொந்தமாக கார் இல்லை என்பது உங்களுக்கும் தெரியுமா? அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

12:33 PM IST:

விவோ டி3 5ஜி மொபைல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

12:00 PM IST:

சென்னையில் பாஸ்பரஸ் வெடித்து ப்ளஸ் 2 மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

11:32 AM IST:

முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான கோமாகி நிறுவனம் இரட்டை பேட்டரி ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

11:20 AM IST:

2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

11:16 AM IST:

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட் அக்லி படத்திற்காக நடிகர் அஜித் குமாருக்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம்.

11:03 AM IST:

சோமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல், மெக்சிகன் தொழிலதிபர் கிரேசியா முனோஸை திருமணம் செய்துள்ளார்.

10:32 AM IST:

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூடானுக்கு வெள்ளிக்கிழமையான இன்று காலை பூடான் சென்றடைந்தார்.

10:15 AM IST:

ஃபேஸ்புக் - இன்ஸ்டாகிராம் தளத்தைப் பயன்படுத்துவதற்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

10:08 AM IST:

மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகளில், 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா, அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார், கடலூர் - தங்கர் பச்சான், மயிலாடுதுறை  - ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார், தருமபுரி - அரசாங்கம்
சேலம் - ந. அண்ணாதுரை விழுப்புரம் - முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காஞ்சிபுரம் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

9:38 AM IST:

கோவை தொகுதி வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் துப்பாக்கி பட பாணியில் வரவேற்றுள்ளார். 

9:38 AM IST:

ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு சென்னையில் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு, பெல்ஸ் சாலை உள்ளிட்ட சாலைகளில் இன்று மற்றும் மார்ச் 26ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

9:05 AM IST:

ஏதர் ரிஸ்ட்டா குடும்ப மின்சார ஸ்கூட்டர் ஏப்ரல் 6 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

8:40 AM IST:

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இனிமேல் எனும் ஆல்பம் பாடலில் கமல் மகள் ஸ்ருதிஹாசன் உடன் ரொமான்ஸ் செய்ததை நடிகை காயத்ரி கலாய்த்துள்ளார்.

8:05 AM IST:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. ராகுல் காந்தி முதல் முதல்வர் மு.க ஸ்டாலின் வரை என பலரும் கடும் கண்டனங்களை பாஜக அரசுக்கும், அமலாக்கத்துறைக்கும் தெரிவித்து வருகின்றனர்.

7:33 AM IST:

நாமக்கல் மக்களவை தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக சூரியமூர்த்தி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாதேஷ்வரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

7:32 AM IST: