ரஷ்யாவில் இதற்கு தட்டுப்பாடாம்...கலக்கத்தில் கால்பந்து ரசிகர்கள்
ரஷ்யாவில் பியர் தட்டுப்பாட்டால் குடிமகன் வருத்தமடைந்துள்ளனர். பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ரஷ்யாவில் குவிந்துள்ளனர். தற்போது ரஷ்யாவில் கார்பன் டை ஆக்சைட் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால் சோடா மற்றும் குளிர்பானம் தட்டுப்பாடு வரிசையில் பியர் இடம் பெற்றுள்ளது. பியர் தயாரிப்பிலும் கார்பன் டை ஆக்சைட் உபயோகப்படுத்தப்பகிறது. இதனால் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கோகோ கோலா தொழிற்சாலை, ஹேன்கின் பியர் தொழிற்சாலை உள்ளிட்ட பல இடங்களில் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கால்பந்தை காண வரும் ரசிகர்கள் தங்களை வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள பியர் அருந்துகின்றனர். ஆனால் மற்ற நாடுகளை பார்க்கும் போது, இங்கிலாந்தில் பியர் பிரியர்கள் அதிகம்.
ஆகையால் தான் இங்கிலாந்து பியர் பிரியர்கள் என செல்லப் பெயர் உண்டு. அந்த அளவிற்கு அந்நாட்டு மக்கள் பியர் அருந்துவார்கள். தற்போது இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் பியர் தட்டுப்பாட்டினால் மிகவும் வருத்தமடைந்திருப்பதாக தனியார் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.