ஹிஜாப் அணிந்து நின்ற பெண்.. பின்னால் இருந்து தாக்கிய மர்ம நபர்.. லண்டன் நகரில் பரபரப்பு - இனவெறி தாக்குதலா?
ஏற்கனவே இரு சீக்கியர்களுக்கு எதிராக நியூயார்க் நகரில் நடந்த இருவேறு இனவெறி தாக்குதலில், 66 வயது சீக்கியர் ஒருவர் இறந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் லண்டன் நகரில் பொதுவெளியில் ஹிஜாப் அணிந்து நின்ற பெண்மணி தாக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் இஸ்லாமிய பெண் ஒருவரை இனவெறியோடு தாக்கியதாக சந்தேகிக்கப்படும் வகையில் வெளியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த செவ்வாயன்று மேற்கு யார்க்ஷயரில் உள்ள டியூஸ்பரியில் உள்ள தெருவில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் குடையுடன் நின்றுகொண்டிருக்கிறார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அங்கே வந்த ஹூட் அணிந்த ஒரு ஆண், ஹிஜாப் அணிந்து நின்றுகொண்டிருந்த அந்த பெண்ணின் தலையில் ஒரு கான்கிரீட் ஸ்லாப் பயன்படுத்தி பலமாக தாக்குகிறார். வலி தாங்காத அந்த பெண் அங்கிருந்து நகர, அந்த மர்ம நபரும் அந்த பெண்ணை சில வினாடிகள் பார்த்துவிட்டு அங்கியிருந்து நகர்கிறார். அருகில் இருந்த சிலர் அந்த பெண்ணை நோக்கி உதவிக்காக ஓடுவதையும் பார்க்கமுடிகிறது.
ஒரு ட்விட்டர் பயனர் அந்த வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, "இது முற்றிலும் பயங்கரமானது - மேற்கு யார்க்ஷயரில் உள்ள டியூஸ்பரியில் ஒரு வெள்ளைக்காரரால் ஒரு ஹிஜாப் அணிந்த முஸ்லீம் பெண்ணின் தலையில் பலகை ஒன்று வீசப்பட்டுள்ளது" என்று எழுதி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கணவர் ஈத் கரிமி தி இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் பேசுகையில், ''நான் உணவு வாங்க உள்ளே சென்றேன், என் மனைவி கையில் குடை வைத்திருந்தால், அவர் வெளியே மழையில் நின்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென்று மக்கள் ஓடுவதையும், அங்கே அந்த நபர் நிற்பதையும் பார்த்தேன்.
அந்த நபர் ஓட முயன்றபோது நான் அவர் தடுத்து நிறுத்தியனேன், உடனே அவர் "போலீசை அழைக்கவேண்டாம், இனிமேல் இப்படி செய்யமாட்டேன்" என்று கத்தினார். ஆனால் அங்கிருந்தவர்கள் போலீசாரை அழைத்துள்ளார்கள். இந்த தாக்குதலில் அந்த பெண்ணுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும், அவர் அதிர்ச்சியிலும், மன அழுத்தத்திலும் இருக்கிறார், என்று அவரது கணவர் ஊடங்களிடம் தெரிவித்தார்.
மேற்கு யார்க்ஷயர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் இந்தத் தாக்குதல் ஒரு வெறுப்புக் குற்றமாக கருதப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார். ஆனால் அவர் கூறுகையில், ''இந்த வீடியோவை நாங்கள் பார்த்தோம், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் தீவிரமாக கட்டுப்படுத்தப்படும் என்று மக்களுக்கு உறுதியளிக்க முடியும் என்றும் கூறினார். குற்றம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு கிர்க்லீஸ் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கடந்த வாரம், லண்டன் போலீசார் வெளியிட்ட தகவலில், கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்த மாதம் 1,353% ஆண்டிசெமிட்டிக் (யூத எதிர்ப்பு) குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை அடுத்து இஸ்லாமிய வெறுப்பு குற்றங்கள் 140% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.