சிங்கப்பூரில் இருந்து தப்பிய கொலைகாரன்.. இன்டர்போல் வெளியிட்ட RED NOTICE - செப்டம்பர் 2018ல் என்ன நடந்தது?
Singapore : கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி, ஜோனலின் அல்வாரெஸ் ரவிஸ் என்ற வீட்டுப் பணிப்பெண்ணின் சிதைந்த உடல், சிங்கப்பூரின் டாம்பைன்ஸ் சாலையில் உள்ள வனப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட தவிர விசாரணையில், அந்த பெண்ணின் கணவரான ராஜு டெஃபு (Raju Dhaly) என்பவர் தான் அந்த பெண்ணை கொலை செய்துள்ளார் என்றும், அவர் கொலை நடந்த அதே ஆண்டன 2018ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி, அவரது சொந்த நாடான பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிற்கு தப்பியோடியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தற்போது இன்டர்போலின் கூற்றுப்படி, அவர் கொலை செய்ததற்காக தற்போது சிங்கப்பூரால் தேடப்படுகிறார் என்பது தான்.
என்ன நடந்தது?
இந்த கொலை வழக்கு குறித்து நடந்த விசாரணையில், கடந்த செப்டம்பர் 2, 2018 அன்று, காலை 8:30 மணியளவில் பாசிர் ரிஸில் உள்ள தனது முதலாளியின் குடியிருப்பில் இருந்து கிளம்பிய ஜோனலின் அல்வாரெஸ் ரவிஸ், காலை சுமார் 9 மணியளவில் பாசிர் ரிஸ் இன்டர்சேஞ்சில் தனது கணவர் ராஜுவைச் சந்தித்துள்ளார்.
சிங்கப்பூர் போகணுமா? உங்களுக்காக ஏர் இந்தியாவின் சூப்பர் அறிவிப்பு! யூஸ் பண்ணிக்கோங்க!
அன்றைய பகலை ஒன்றாகக் கழித்த அவர்கள், மதியம் டாம்பைன்ஸ் சாலையை நோக்கிப் பொதுப் பேருந்தில் ஏறி சென்றுள்ளனர். EZ-இணைப்பு பதிவுகள், டெஃபு லேன் 2க்கு முன்பாக டாம்பைன்ஸ் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மாலை 4.17 மணிக்கு ஜோனலின் அல்வாரெஸ் ரவிஸ் இறங்கியதாகக் காட்டுகின்றது.
மாலை 5 மணியளவில், ராஜு டெஃபு லேன் 1ல் இருந்து டாக்ஸியில் ஜூரோங் நதிக்கு அருகில் உள்ள தனது ஜாலான் பாப்பான் தங்குமிடத்திற்குத் திரும்பினார். மாலையில் விடுதியை விட்டு வெளியேறிய அவர், வங்கதேசத்துக்கு விமான டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, செப்டம்பர் 3, 2018 அதிகாலை 5:30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டுள்ளார்.
ஜோனலின் அல்வாரெஸ் ரவிஸ் கொலை
செப்டம்பர் 6, 2018 அன்று டாம்பைன்ஸ் சாலையின் பிரதான நடைபாதையில் இருந்து ஐந்து மீட்டர் தொலைவில் ரவிஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது. "கழுத்து நெரிக்கப்பட்ட காயத்தால்" ரவிஸ் இறந்துவிட்டதாக மாநில பிரேத பரிசோதனையாளர் கண்டறிந்தார் மற்றும் அவரது மரணம் "அவரது கணவரால் செய்யப்பட்ட சட்டவிரோத கொலை" என்றும் கூறினார்.
கொலையாளி ராஜு, சிங்கப்பூரில் கடந்த 2007-ம் ஆண்டு பராமரிப்புப் பணியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். ரவிஸைப் பொறுத்தவரை, அவர் ஹாங்காங்கிற்கு வேலைக்குச் செல்வதற்கு முன்பு, பிப்ரவரி 2010 மற்றும் நவம்பர் 2011 க்கு இடையில் சிங்கப்பூரில் வீட்டுப் பணியாளராகப் பணிபுரிந்துள்ளார். ராஜு மற்றும் ரவீஸ் இருவரும் 2015 இல் திருமணம் செய்து கொண்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படும் நிலையில் தான், ராஜு அவரது மனைவியை கொன்றுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவரை தேடி வரும் சிங்கப்பூர் காவல்துறை மற்றும் இன்டர்போல் தேடிவரும் நிலையில் தற்போது இன்டர்போல் RED NOTICEஐ வெளியிட்டுள்ளது. RED NOTICE என்பது "நாடுகடத்தப்படுதல், சரணடைதல் அல்லது அதுபோன்ற சட்ட நடவடிக்கை நிலுவையில் உள்ள ஒருவரைக் கண்டுபிடித்து, தற்காலிகமாக கைது செய்ய, உலகெங்கிலும் உள்ள சட்ட அமலாக்கத்திற்கு வைக்கப்டுடம் ஒரு கோரிக்கையாகும்".
சிங்கப்பூரில் சுற்றுலா மாநாடு: புதுச்சேரி அரங்கைத் திறந்து வைத்தார் அமைச்சர் லட்சுமிநாராயணன்