தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்ட பெண்...! யூடியூப் உதவியுடன் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்
மனித உதவி - மருத்துவ உதவி இல்லாமல் யூடியூப் உதவியுடன் பெண் ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்ட நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் நேஷ்வில் பகுதியைச் சேர்ந்தவர் டியா ஃப்ரீமேன். இவர் விடுமுறையைக் கழிக்க துருக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளார். கடந்த ஜனவரி மாத வாக்கில் தனது பிரசவம் குறித்து அறிந்து கொண்ட டியா, ஜெர்மனி நாட்டுக்கு சுற்றுலா செல்வதாக திட்டமிட்டிருந்தார்.
பிரசவத்துக்கு நாட்கள் இருப்பதை காரணமாக கொண்டு, தனது சுற்றுப்புயணத்தை ரத்து செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தார். அதன்படி, தனது சுற்றுலா பயணத்தை தொடங்கினார். பயணத்தின்போது விமான நிலையத்தில் சோதனை மையத்தில் காத்திருந்தபோது டியாவுக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது. இதனால் ஓய்வெடுக்க முடிவு செய்த டியா, இஸ்தான்புல் நகல் உள்ள தங்கும் விடுதிக்கு சென்றார்.
விடுதியில் இருந்து டியா, பிரசவ வலிக்கான அறிகுறிகளை இணையத்தில் தேடினார். பிரசவ வலிக்கான அறிகுறிகள் பற்றி தெரிந்து கொண்ட அவர், விடுதி அறையினுள் எப்படி குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும என்பதை கூகுளில் தேடியுள்ளார். தனது தேடலுக்கு பதில் கிடைத்தப்பின், பாத் டாப்-ல் பாதி அளவு நீரை நிரப்பி அதில் சாய்ந்தவாறு படுத்துக் கொண்டார்.
பின்னர் சில நிமிடங்களில் குழந்தை பிறந்து நீரில் மிதந்தது. பிறந்த குழந்தையின் பாலினம் தெரியாத நிலையில், ஆர்வத்துடன் குழந்தையை கையில் எடுத்துள்ளார் டியா. குழந்தையை தொப்புள் கொடி சுற்றியிருப்பதை கண்ட டியா, தொப்புள் கொடி துண்டிப்பது குறித்து மீண்டும் கூகுள் வழியே தேடியுள்ளார். பிறகு குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்துள்ளார்.
தனக்கு கிடைத்த டவல், ஷூ லேஸ், தேநீர் கோப்பை, சிறிய கத்தி உள்ளிட்டவைகளைக் கொண்டு வெற்றிகரமாக குழந்தையைப் பெற்றுள்ளார் டியா. இணையத்தின் உதவியுடன் பெண்மணி ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்ட நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.