சிக்கன் நக்கெட்ஸ் சாப்பிட்டும் கின்னஸ் வாங்கலாம்.. மாஸ் காட்டிய பிரிட்டிஷ் பெண்..!
லீ லட்கெவர் ஏற்கனவே பலமுறை கின்னஸ் சாதனை படைத்தவர் ஆவார். முன்னதாக மூன்று நிமிடங்களில் அதிக சிக்கன் நக்கெட்களை சாப்பிட்டதில் இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சோறு யாருக்குத் தான் பிடிக்காது. உணவு என்பது அனைவருக்குமே மிகவும் அத்தியாவசியமான ஒன்று ஆகும். சிலருக்கு உணவு அத்தியாவசிய தேவை என்பதோடு, உணவு அவர்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது ஆகும். பலருக்கும் சாப்பிடுவது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கிறது. ஆயிரம் கஷ்டங்கள், மன கவலைகள் இருந்தாலும், சாப்பிடும் போது சிலருக்கு மன நிம்மதி கிடைக்கும்.
சமீப காலங்களில் சாப்பாடு பிரியர்கள் உருவாகி, பலர் யூடியூப் பிரபலங்களாகி இருக்கின்றனர். இந்த நிலையில், சாப்பாடு சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைக்க முடியும் என பிரிடிஷ் பெண் நிரூபித்து காட்டியுள்ளார். பிரிட்டனை சேர்ந்த பெண்மணி ஒரு நிமிடத்தில் அதிக சிக்கன் நக்கெட்ஸ் சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சிக்கன் நக்கெட்ஸ்:
அதிவேகமாக உணவு உண்பதில் ஏற்கனவே பிரபலமான லட்கெவர் சிக்கன் நக்கெட்ஸ் சாப்பிட்டு கின்னஸ்-இல் இடம்பிடித்துள்ளார். ஒரு நிமிடத்தில் இவர் அவசர அவசரமாகவும், அதே வேளையில் நக்கெட்ஸ்-இன் சுவையை அனுபவித்து சாப்பிடும் அழகு வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
352 கிராம் எடை கொண்ட சுமார் 19 நக்கெட்களை லீ ஷூட்கெவர் ஒரே நிமிடத்தில் சாப்பிட்டு அசத்தினார். இவர் சாப்பிட்ட சிக்கன் நக்கெட்ஸ் மெக்டொனால்ட்ஸ் கடையில் வாங்கியது ஆகும். ஒரே நிமிடத்தில் சாப்பிட 20 சிக்கன் நக்கெட்களை எடுத்துக் கொண்ட லீ ஷூட்கெவர் ஒரே நிமிடத்தில் 19 நக்கெட்களை தான் சாப்பிட்டார். சாப்பிட துவங்கும் முன் மாடல் அழகியான நெலா சிஸ்ஸர் படைத்த சாதனையை தான் முறியடிப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
298 கிராம்:
நவம்பர் 2020 வாக்கில் நெலா சிஸ்ஸர் 298 கிராம் எடை கொண்ட சிக்கன் நக்கெட்களை சாப்பிட்டார். தான் திட்டமிட்ட எண்ணிக்கையில் ஒரு நக்கெட் குறைந்து விட்டதை எண்ணி கவலை கொண்ட லீ ஷூட்கெவர் சாப்பிட்டு முடித்த பின் மேற்கொள்ளப்பட்ட கணக்கில் நெலாவின் சாதனையை முறியடிக்கும் வகையில் 54 கிராம் அதிக எடை கொண்ட நக்கெட்களை சாப்பிட்டுள்ளார் என தெரியவந்தது.
லீ ஷூட்கெவர் ஏற்கனவே பலமுறை கின்னஸ் சாதனை படைத்தவர் ஆவார். முன்னதாக மூன்று நிமிடங்களில் அதிக சிக்கன் நக்கெட்களை சாப்பிட்டதில் இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மூன்று நிமிடங்களில் இவர் அதிகபட்சமாக 775.1 கிராம் எடை கொண்ட சிக்கன் நக்கெட்களை சாப்பிட்டார்.
லீ ஷூட்கெவர் முந்தைய சாதனைகள்:
- 2019 ஆம் ஆண்டு பழங்கள் மற்றும் உலர் பழங்களால் செய்யப்பட்ட மூன்று மின்ஸ் பைகளை 52.21 நொடிகளில் சாப்பிட்டார்
- 2019 ஆம் ஆண்டு மூன்று முட்டை ஊறுகாய்களை 7.80 நொடிகளில் சாப்பிட்டார்
- 2019 ஆம் ஆண்டிலேயே கைகளின் உதவி இன்றி ஒரு மஃபினை 21.95 நொடிகளில் சாப்பிட்டார்
- 2020 ஆம் ஆண்டு கைகளின் உதவி இன்றி 20 மார்ஷ்மல்லோக்களை சாப்பிட்டார்
- 2020 ஆம் ஆண்டிலேயே ஒரு நிமிடத்தில் எட்டு தக்காளிகளை சாப்பிட்டார்