நாடெல்லாம் சின்ன வீடு! ஊரெல்லாம் குழந்தைகள்! கிரிக்கெட் வீரர் மீது மனைவி பரபரப்பு புகார்!
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கானுக்கு முறைகேடாக பிறந்த 5 வாரிசுகள் உள்ளதாக, அவரது முன்னாள் மனைவி ரேஹம் கான் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின், தனியாக பாகிஸ்தான் தெஹ்ரிக் குரேஷி என்ற கட்சியை தொடங்கி, அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, அவர் 3 திருமணங்கள் செய்துள்ளார். அதில், ஜெமிமா கோல்ட்ஸ்மித், ரேஹம் கான் ஆகியோரை டைவர்ஸ் செய்துவிட்ட இம்ரான் கான், சமீபத்தில் புஷ்ரா மனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், 2வது மனைவி ரெஹம் கான் தனது வாழ்க்கை வரலாறை புத்தமாக எழுதி வெளியிட்டுள்ளார். லண்டனில் அமேசான் வழியாக வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தில் இம்ரான் கான் உடனான தனது 10 மாத திருமண வாழ்க்கை பற்றி ரேஹம் கான் காரசாரமாக எழுதியுள்ளார். அதில், இம்ரான் கான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர், குடும்ப வாழ்க்கையின் விதிமுறைகள் புரியாத நபர், பெண்களை மதிக்க தெரியாத ஆசாமி என்று ரேஹம் கான் தெரிவித்துள்ளார். மேலும், ‘’அவருக்கு தெரிந்தது எல்லாம் செக்ஸ், போதை மருந்து பழக்கம், நடனம் ஆடுவது போன்றவை மட்டுமே. முறைகேடான செக்ஸ் உறவில் அதிகம் விருப்பம் கொண்ட நபர் இம்ரான் கான். குடும்பத்தையே பராமரிக்க தெரியாத இம்ரான் கான், அரசியல் கட்சி தொடங்கி சிரமப்பட்டபோது, நான் சில ஆலோசனைகள் தந்து உதவினேன். பல தனிப்பட்ட வழக்கு விசயங்களையும் சந்திக்கவும் நேரிட்டது. முறையாக திருமணம் செய்யும் முன்பாகவே முறைகேடான வழியில் இம்ரான் கானுக்கு 5 குழந்தைகள் பிறந்துள்ளன. இதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அவரோடு முறைகேடான உறவு வைத்திருந்த பெண்களில் சிலர் இந்தியாவை சேர்ந்தவர். ஒருவர் கூட பகிரங்கமாக இந்த உண்மையை வெளிப்படுத்த விரும்பவில்லை,’’ எனக் கூறியுள்ளார். இம்ரான் கானின் கடந்த காலத்தை அதிகம் கிளறி எழுதப்பட்டுள்ளதால், ரேஹம் கான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்திற்கு, பெரும் வரவேற்பு எழுந்துள்ளது.